இது வேற லெவல் அப்டேட்! எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2021, 12:21 PM IST
இது வேற லெவல் அப்டேட்!  எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! title=

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது.  அப்போதிலிருந்தே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.  அநேகமாக படத்தின் ரிலீஸ் தேதியாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.  சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் என்று டாப் ஹீரோக்களை வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கிறது.  

ALSO READ மீண்டும் ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியானது.  அதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  கிறிஸ்துமஸ் விடுமுறை அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.  பொங்கல் தினத்தில் ஏற்கனவே அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.  இதனால் சூர்யா படமும், அஜித் படமும் மோதிக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  தற்போது இந்த இரண்டு தேதிகளும் இல்லாமல் எதற்கும் துணிந்தவன் படம் 2022 பிப்ரவரி 4ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  சூர்யாவின் கடைசி இரண்டு படங்களும் OTT யில் வெளியானது.  

 

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.  தமிழகத்தில் நடந்த மிக முக்கியமான பிரச்சனைகளை பேசும் படமாக இந்த படம் தயாராகி வருகிறது.  மேலும் பல திரைப்படங்களுக்கு பிறகு தற்போது கிராமத்து கதைக்களத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் போன்றோரும் நடிக்கின்றனர்.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருந்தது.  டப்பிங் பணிகளும் முழுவீச்சில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ALSO READ விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News