யானை படத்தில் 6-வது முறையாக இணையும் சூர்யா-ஹரி கூட்டணி!

ஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு யானை என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 25, 2019, 11:25 AM IST
யானை படத்தில் 6-வது முறையாக இணையும் சூர்யா-ஹரி கூட்டணி!

ஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு யானை என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குநர் ஹரி - நடிகர் சூர்யா கூட்டணியில் ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக இவர்கள் இணைய இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு ‘யானை’ என பெயரிடப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரது கூட்டணியில் தற்போது உருவாகும் ‘யானை’ திரைப்படத்தை ஏ.வி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம். அனில் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன் இணைந்து இயக்கிய இந்தப் படத்தில், சிவாஜி தேவ் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், 5 வருடங்களுக்குப் தற்போது சூர்யாவின் யானை திரைப்படத்தை ஏ.வி.எம் தயாரிக்க இருக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே.’ தற்போது வெளியீடுக்கு தராயிகியுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் திரையை எட்ட காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘காப்பான்’ படத்தைத் தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கம் சூர்யா. அதன்பிறகே ஹரி இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

More Stories

Trending News