பிரபல சீரியல் நடிகருக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மகளா? அவரே கொடுத்த விளக்கம்!

Amit Bhargav Daughter Autism : பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவிற்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வந்த நிலையில், அது குறித்து அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2024, 07:14 PM IST
  • சீரியல் நடிகரின் மகளுக்கு ஆட்டிசம்
  • இது குறித்து அவரே கூறியது என்ன?
  • முழு தகவல்!
பிரபல சீரியல் நடிகருக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மகளா? அவரே கொடுத்த விளக்கம்!  title=

Amit Bhargav Daughter Autism : தமிழ் சின்னத்திரை உலகில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் அமித் பார்கவ்.கர்நாடகாவை சேர்ந்த இவர், 2010ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதை தொடர்ந்து, ஆரம்பத்தில் இவரை பிடிக்காதவர்களுக்கு கூட பின்னர் பிடிக்க ஆரம்பித்தது. 

2014 ஆம் ஆண்டு..கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் நடித்த பார்க்கவிற்கு தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், எனக்குள் ஒருவன், அரண்மனை 3, எண்ணமோ ஏதோ, எண்ணை அறிந்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

திருமணம்:

அமித் பார்க்கவிற்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்ரீரஞ்சினி சுந்தரத்திற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது காதல் திருமணம் ஆகும். இரு வீட்டாரும் சேர்ந்து நடத்தி வைத்த இந்த திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதை அடுத்து, அந்த குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா என்று சந்தேகம் நடிகரின் சமீபத்திய பேச்சு மூலம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தன் மகள் குறித்து பேசி இருக்கும் அமித், தன் குழந்தையை அனைத்து மருத்துவர்களிடமும் கொண்டு சென்று பரிசோதித்து விட்டதாகவும், அவருக்கு Echolalia எனப்படும் பிரச்சினை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை இருப்பவர்களால் ஒருவர் சொல்லும் விஷயத்தை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது என்றும் இது போன்ற பாதிப்பு தான் தன் மகளுக்கும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், இதைத் தவிர தன் மகள் நன்றாக தான் இருப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார். எதிர்காலத்தில் தன் மகள் என்னவாக மாற வேண்டுமென்று ஆசைப்படுகிறாரோ அதுவாகவே மாறட்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. 

சீரியல்கள்:

திருமணத்திற்கு பிறகு அமித்தின் மனைவி சிவரஞ்சனி டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். அமித் தொடர்ந்து படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் தொடரிலும் நடித்தார். சில கோலிவுட் படங்களிலும் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. இது மட்டுமல்ல, தமிழில் இருக்கும் சிறந்த டப்பிங் கலைஞர்களுள் ஒருவர் நடிகர் அமித். இவர் குரலில் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. பல கதாப்பாத்திரங்களுக்கு இவர் வாய்ஸும் கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | Mr & Mrs சின்னத்திரையில் போட்டியிடும் மொத்த போட்டியாளர்கள் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News