சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியிடம் இத்தனை கார்களா? அசத்தலான புகைப்படங்கள்!

ஆல்யா மானசாவுக்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவரது கணவர் அவருக்கு அடிக்கடி கார்களை பரிசளித்து வருகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 10:39 AM IST
  • ராஜா ராணி சீரியலில் நடித்த போது திருமணம
  • குழந்தை பெற்ற பிறகு மீண்டும் சீரியலில் நடித்த ஆல்யா
  • இரண்டாவது குழந்தை பிறந்ததால் தற்போது பிரேக் எடுத்துள்ளார்
சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியிடம் இத்தனை கார்களா? அசத்தலான புகைப்படங்கள்! title=

சின்னத்திரையின் நட்சத்திர ஜோடியான சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு சமீபத்தின் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவிக்காக புதிய காரை பரிசளித்தது குறித்து தனது இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். அப்படியே அவரது இன்ஸ்டாவை புரட்டிப்பார்த்த போது அவரின் கார் கலெக்‌ஷன் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

மேலும் படிக்க | பாலியல் புகாரில் சிக்கிய சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் நியல் ஜோடியாக மாறினார்கள். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உடல் எடை கூடிய அவர், சட்டென எடையை குறைத்து மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கமிட் ஆனார். அடுத்த சில மாதங்களில் இரண்டாவதாக கர்ப்பமான ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. விரைவில் இவர் சீரியலில் நடிப்பார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாவில், ”உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி. இப்போது எங்கள் குடும்பம் இளவரசி ‘அய்லா’ மற்றும் இளவரசன் ‘ஆர்ஷ்’ உடன் நிறைவடைகிறது. நன்றி ஆல்யா மானசா” என பதிவிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

மேலும் படிக்க | தி ஃபேமிலி மேன் 3 வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

அதோடு அவர் ஆல்யாவுக்கு பரிசளித்த பென்ஸ் காரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னர் ஆல்யா மானசா முதல் முறையாக கர்ப்பமாக இருந்த போது அவருக்கு பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்தார். அதன்பிறகு அய்லாவின் முதல் பிறந்தநாளுக்கு சில நாட்கள் இருக்கும் போது, விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் ஆல்யாவுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக மேடையிலேயே வழங்கினார். தற்போது மீண்டும் பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கு நடுவே இவர்கள் கியா கார்னிவல் கார் ஒன்றையும் சமீபத்தில் வாங்கியுள்ளனர். தற்போது இவர்களின் கார் கலெக்‌ஷன் தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News