ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்?

ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் தளபதி விஜய்யும், நடிகை தீபிகா படுகோனேவும் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 02:37 PM IST
  • ஜவான் படத்தில் கேமியோ ரோலில் தளபதி விஜய் மற்றும் தீபிகா படுகோனே.
  • இருவரையும் நடிக்க வைக்க அட்லீ பேச்சுவார்த்தை.
  • தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்?  title=

பிரபல நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ 'ஜவான்' என்கிற படத்தை இயக்குகிறார், சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரபூர்வ தலைப்பு வெளியிடப்பட்டது.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.  ஷாருக்கான் நடிக்கும் இந்த ஜவான் படத்தில் நடிகர் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில செய்திகள் வெளியானது.  இந்நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஷாருக்கானின் ஜவான் படத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Sharukh

மேலும் படிக்க | மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, இருப்பினும் ஷாருக்கான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  மேலும் ஷாருக்கான் பல படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், இதன்மூலம் அவரை மீண்டும் மீண்டும் திரையில் கண்டு ரசிக்கலாம்.  மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கெட்டரி : தி நம்பி எஃபெக்ட்' படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.  அதனைத்தொடர்ந்து அமீர் கான் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் 'லால் சிங் சத்தா' படத்திலும், ரன்பிர் கபூர் நடிக்கும் 'பிரம்மாஸ்திரா' படத்திலும், சல்மான் கான் நடிக்கும் 'டைகர்-3' படத்திலும் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

'ராக்கெட்டரி : தி நம்பி எஃபெக்ட்'  படத்தில் நடித்ததற்கு ஷாருக்கான் சம்பளம் வாங்கிகொள்ளவில்லை என சமீபத்தில் அவரை நடிகர் மாதவன் புகழ்ந்து பேசியிருந்தார்.  தற்போது ஷாருக்கானின் 'பதான்' படத்திற்கு ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது, அதனையடுத்து 'ஜவான்' படத்திற்காக ஹைதராபாத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News