விஜய் நடிக்கும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் 2023ம் ஆண்டில் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.    

Written by - RK Spark | Last Updated : Jun 3, 2023, 02:12 PM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது லியோ படம்.
  • படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
  • விரைவில் முதல் பாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது.
விஜய் நடிக்கும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்! title=

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் மெகா ஆக்‌ஷன் திரைப்படமான லியோ விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - அனிருத் கூட்டணியில் உருவாக்கிவரும் நிலையில் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரும் என பாடகுழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தானர். சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.  படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

மேலும் படிக்க | பாரதிராஜாவின் மகன் இயக்கும் படத்தில் விபத்து..! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த படக்குழு..!

அன்று லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அது மட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளில் லியோவின் ஒரு காட்சி வீடியோவையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  இப்படாத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான 'விக்ரம்' படத்தின் ஸ்பெஷல் க்ளிம்ப்ஸ் வீடியோவை கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லியோவில் மெகா மல்டிஸ்டார் நடிகர்களான விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, ஜனனி, அபிராமி வெங்கடாசலம், பாபு ஆண்டனி மற்றும் பலர் உள்ளனர்.  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும், அன்பரிவ் சண்டைக்காட்சியும் செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.  அதற்கான முன்னோட்டமாக நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் புதிய அப்டேட் அமையும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.  'லியோ' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கப்போகும் 'தளபதி 68' படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் 'தளபதி 68' படத்தை தயாரிக்க, சுமார்  20 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.  'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர் என்கிற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார்.  'தளபதி 68' படம் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள ஈகோவை பற்றிய படம் என்று சில செய்திகள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படமும் இதே கதைக்களத்தில் தான் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த 'வாரிசு' படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற கதையுள்ள படத்தில் விஜய் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகளால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

மேலும் படிக்க | விரைவில் திருமண வாழ்க்கையில் நுழையும் பிரபல தென்னிந்திய காதல் ஜோடி..ஜூன் 9 நிச்சயதார்த்தமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News