GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?

Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2024, 10:21 AM IST
  • அடுத்த மாதம் பிரம்மாண்டமாக திரைக்கு வருகிறது விஜய்யின் தி கோட்.
  • போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
  • 88 கோடி ருபாய் MG அளிக்கப்பட்டுள்ளது.
GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா? title=

Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக திரைக்கு வெளியாவிருக்கும் தி கோட் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை டாப் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் The GOAT - The Greatest Of All The Time (தி கோட்). இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளதுக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய The GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி, துருக்கி, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடைபெற்றது.

கடந்த மாதம் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கிரீன் பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இங்கே படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது. தற்போது'படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. அந்த வகையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனுடன் இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் கோமியோ ரோலில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக மறந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி அளிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த 'காளிதாஸ் 2' படத்தின் படப்பிடிப்பு!

தொடர்ந்து படம் தொடர்பாக சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வந்தது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியானது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அவருடன் இந்த படத்தில் மறைந்த மறைந்த பாடகர் பவதாரிணி இணைந்து பாடியுள்ளார். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் GOAT படத்தின் ஷூட்டிங், VFX மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் உரிமையை மாநிலம் வாரியாக பிரித்து ஏஜிஎஸ் நிறுவனம் விற்று இருக்கிறது. அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது விஜய்யின் GOAT படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றி இருக்கிறது, மேலும் 15 கோடி ருபாய் அளவுக்கு கொடுத்து அவர்கள் வாங்கி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறதாம். 88 கோடி ருபாய் MG அளித்து அவர்கள் படத்தை வாங்கி இருக்கின்றனர். இதே நிறுவனம் தான் கர்நாடகா உரிமையையம் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News