வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ட்ரைலர்

'துக்ளக் தர்பார்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2021, 02:07 PM IST
வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ட்ரைலர் title=

டெல்கிபிரசாத் தீனதாயள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் நையாண்டி பாணியில் உருவாகி வருகிறது. லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள (Vijay Sethupathi) இந்த படத்திற்க்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தனர்.'

ALSO READ | நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்! Video!

இதற்கிடையில் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படகுழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 'துக்ளக் தர்பார்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்பனையில் சிக்கல் எழுந்தது. பின், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு பின்பு ஓடிடியில் வெளியீடு என்ற முடிவை எடுத்தது 'துக்ளக் தர்பார்' படக்குழு. 

'ALSO READ | ஒரே வாரத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News