ஊர் படத்தையெல்லாம் வெளியிடும் உதயநிதி, தம்பியின் படத்தை விட்டுருவாரா?

தமிழ் சினிமாவின் பெரிய படங்களையெல்லாம் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய தம்பி அருள்நிதியின் படத்தை வெளியிடாமல் இருப்பாரா என்ன?.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2022, 05:49 PM IST
  • விரைவில் வெளியாகும் டைரி திரைப்படம்
  • அருள்நிதி நாயகனாக நடித்திருக்கிறார்
  • உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்
ஊர் படத்தையெல்லாம் வெளியிடும் உதயநிதி, தம்பியின் படத்தை விட்டுருவாரா? title=

தமிழில் வெளியாகும் பெரிய படங்களையெல்லாம் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. பீஸ்ட், டான், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தமிழகத்தில் வெளியிட்ட உதய நிதிஸ்டாலின், அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் வர இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தையும் வெளியிட இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இன்னும் ஏராளமான தமிழ் படங்களை வெளியிட்டது. வெளியிடவும் இருக்கிறது. 

மேலும் படிக்க | அஜித் தரிசனம்... கோயிலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

அந்தவரிசையில், தன் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய தம்பி அருள்நிதி நடித்திருக்கும் ‘டைரி’ திரைப்படத்தையும் தமிழகத்தில் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஊர் படத்தையெல்லாம் வெளியிடும் அவர், தன் சொந்த தம்பியின் படத்தை வெளியிடாமல் இருப்பாரா என்ன?. இது குறித்து டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருள்நிதி நடிப்பில் வெளியாகும் டைரி திரைப்படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவித்துள்ளது.     

நடிகர் அருள்நிதி அண்மைக்காலமாக வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடைய நடிப்பில் தற்போது உருவாக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘டைரி’. புதுமுக இயக்குநர் இண்ணாச்சி பாண்டியன் படத்தை இயக்கியுள்ளார். இவர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். திரில்லர், சஸ்பென்ஸ் கதையம்சத்துடன் டைரி உருவாகியிருக்கிறது. பைவ் ஸ்டார் கணேசன் படத்தை தயாரித்திருக்கிறார். ரோன் எதன் யோஹான் இசையமைத்திருக்கும், டைரி திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

மேலும் படிக்க | கேஜிஎப் 2 செய்த மற்றொரு சாதனை! கெத்து காட்டும் யாஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News