'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Last Updated : Jun 6, 2017, 11:36 AM IST
'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! title=

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 

ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. 

Trending News