சங்கீத கலாநிதி பாலமுரளிகிருஷ்ணா காலமானார்

கர்நாடக இசைக் கலைஞர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 

Last Updated : Nov 23, 2016, 09:15 AM IST
சங்கீத கலாநிதி பாலமுரளிகிருஷ்ணா காலமானார் title=

சென்னை: கர்நாடக இசைக் கலைஞர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஜூலை 6, 1930 அன்று பிறந்தார். இவர் தென்னிந்தியக் கருநாடக இசை மேதை ஆவார். இவர் பாடகர் மட்டும் அல்லாமல், ஒரு பாடல் இயற்றுநர் மற்றும் இசைக்கருவி வல்லுனர். முரளிகிருஷ்ணா சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். 

ஆதி சங்கராச்சாரியா, இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பாலமுரளிகிருஷ்ணா. இந்நிலையில் சென்னை ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் பாலமுரளி கிருஷ்ணா உயிர் நேற்று பிரிந்தது.

இவர் இரு முறை தேசிய விருது பெற்றவர். பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் அவர் பெற்றவர்.

சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா. அவரது மறைவுக்கு திரையுலக இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Trending News