விஜய் ஆண்டனியின் கொலை - ட்ரெய்லர் வெளியானது

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 06:40 PM IST
  • கொலை என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்
  • படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது
  • ட்ரெய்லரை பா. இரஞ்சித் வெளியிட்டார்
விஜய் ஆண்டனியின் கொலை - ட்ரெய்லர் வெளியானது title=

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அதன் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய  பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். 

படத்தில் இடம்பெற்றிருக்கும் நீர்க்குமிழோ என்ற சிங்கிள் சமீபத்தில் வெளியானது. பாடலை கார்த்திக் நேத்தா எழுத சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சுதந்திர தினமான இன்று வெளியாகுமென்று படக்குழு அறிவித்திருந்தது.

 

அதன்படி இன்று கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை இயக்குநர் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள், ஒரு கொலையை மையமாக வைத்து கதை நகர்வதை உணர்த்துகிறது. மேலும் விஷுவலும் ட்ரெய்லரில் சிறப்பாக இருக்கின்றன. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | Independence Day 2022: நாட்டை நேசிக்கிறேன் அரசாங்கத்தை அல்ல - மத்திய அரசை சீண்டிய பி.சி.ஸ்ரீராம்

முன்னதாக சில நாள்களுக்கு முன்பு கொலை படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி, “உலகத்தரமான ஒரு படத்தில் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. எந்த படத்துக்குமே முழுப்பொறுப்பு, இயக்குநர்தான். அவருக்குத் தூணாகவும் துரும்பாகவும் இருப்பதுதான் என்னைப் போன்ற டெக்னீஷியன்கள். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி, இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிற தரமான இயக்குநர் என்பது ‘கொலை’ படம் பார்க்கும்போது தெரியும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News