விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ‘ரோமியோ’. இப்படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் ரோமியோ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மிருணாளினி ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர் குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்தார். ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | தன்னை விட 12 வயது மூத்த நடிகரை காதலித்த ராஷ்மிகா! அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் கூறுவதாக அவர் தெரிவித்தார். படத்தின் நாயகி முதலிரவு காட்சியில் மதி அருந்துவது போன்ற வெளியிட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி படத்தில் சிறிய காட்சியாக அதை வெளிப்படுத்தி உள்ளதாகவும், இதில் கலாச்சார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தபடவில்லை என தெரிவித்தார். பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள் என குறிப்பட்ட அவர், ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதாகவும், அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருப்பதாக அவர் கூறினார். நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு தங்களின் ஆதரவு குறித்த நிலைபாடு குறித்த அவர் பேசுகையில் தாம் அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ,ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும், வறுமை, சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்று கூறிய அவர், ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.
ரோமியோ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிக்க மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விநாயக் வைத்தியநாதன், ” ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். வாய்ப்புகளுக்காக காத்திருந்த போதுதான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கால் வந்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு அவர் அவ்வளவு டீடெய்லாகப் பேசினார். கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார். இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் ரோமியோ" என்று கூறி இருந்தார்.
மேலும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ