தளபதி 68 அப்டேட்: விஜய் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Thalapathy 68 Update: வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘தளபதி 68’ படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 15, 2023, 04:31 PM IST
  • தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
  • இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
  • இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தளபதி 68 அப்டேட்: விஜய் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள் title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனது 68வது படம் மூலம் முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

தளபதி 68:

‘லியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘தளபதி 68’. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவின் ஜாலி இயக்குநர் என்று பெயரெடுத்துள்ளார். தளபதி 68 படத்தில் பிரசாந்த், ஜெய், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

படப்பிடிப்பு ஆரம்பம்..

தளபதி 68 படத்தில், நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான லுக் டெஸ்டிங் பணிகள், லியோ படத்தின் ரிலீஸிற்கு முன்னரே லண்டனில் நடைப்பெற்றது. இதற்காக வெங்கட் பிரபு, விஜய், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றனர். இதையடுத்து, தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய், சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு திரும்பினார். 

லியோ படத்தின் ரிலீஸிற்கு முன்னர், தளபதி 68 படத்தின் பூஜைகள் தொடங்கியது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில், ரன்னிங் மற்றும் கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாக திரையுலகில் இருந்து தகவல்கள் வெளியானது. இதைத்தாெடர்ந்து, பாங்காங்கிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த வேலைகளை முடித்த பின்னர் விஜய் சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு திரும்பினார். 

விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்த தகவல்..

நடிகர் விஜய், தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், நடுத்தர வயதில் இருக்கும் ஒரு கதாப்பாத்திரத்திலும் இளைஞராகவும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இதில், ஒரு விஜய் நெகடிவ் கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது. இந்த கேரக்டர், படத்தின் வில்லனாகவும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இது போன்ற நெகடிவ் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். 

மேலும் படிக்க | வெயிட் பார்டியாக மாறிய சந்தானம்..முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஹீரோவான அஜித்தை நெகடிவ் ஷேட் பொருந்திய ஹீரோவாக காண்பித்திருப்பார். இது போல, விஜய்க்கு ஸ்பெஷலான கதாப்பாத்திரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை இரட்டை வேடங்களில் விஜய்..

நடிகர் விஜய், இதற்கு முன்னர் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஃப்ளேஷ் பேக்கில் தோன்றும் தந்தையாகவும் நிகழ்காலத்தில் வாழும் மகனாகவும் இரண்டு கேரக்டரில் நடித்து வந்த இவர், அழகிய தமிழ் மகன் படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு கேரக்டரில் தோன்றினார். தொடர்ந்து கத்தி, புலி, மெர்சல், பிகில் என பல படங்களில் டூயல் ரோலில் நடித்தார். தற்போது, தளபதி 68 படமும் அந்த லிஸ்டில் சேர உள்ளது. 

மேலும் படிக்க | வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்த கார்த்திகா நாயர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News