திருமணங்களுக்கு அழைத்தால் என்ன பரிசு கொடுப்பது என யோசனையாக உள்ளதா? அப்போது என்ன டிரெண்டோ அதைக் கொடுங்கள். நீங்களும் டிரெண்ட் ஆகி விடுவீர்கள். ஆம்!!
ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக கொடுத்து விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர்
மணமக்களையும் அங்கிருந்தவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட விஜய் (Vijay) மக்கள் இயக்க இளைஞரணி துணை தலைவராக இருப்பவர் மகேஷ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், ராம்குமார், பிரியமுடன் உண்ணி பிரசன்னா, தளபதி மணிகண்டன், எட்டிமடை பாலு, ரமேஷ்குமார், சி.வி.எஸ் தினேஷ் விஜய் , வடவள்ளி பிரவீன், தளபதி ராம்ஸ், தனபால், கிரண், பாபுராஜ், சமத்துவம் ரவி, செல்வம், கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்கள் மகேஷ்வரன்,ஸ்ருதி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ALSO READ:'தக்காளிக்கு பிரியாணி இலவசம்' :ஆம்பூர் பிரியாணி அதிரடி ஆஃபர்
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த அதிகன மழை காரணமாக பல காய்கறிகளின் விலை மிக அதிகமாகியுள்ளது. குறிப்பாக தக்காளியின் (Tomato) விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. மழை வெளுத்து வாங்குவதால் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், அதிர்ச்சியில் இருக்கும் மக்கள், தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என கூகுளில் தேடி வருகின்றனர். கூகுள் கீ வேர்டு லிஸ்டில், தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என்பது முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அளவுக்கு தக்காளி விலை மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
சுமார் ரூ. 125-ஐத் தாண்டிய தக்காளி விலை, தற்போது குறைந்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளியின் விலை ரூ.30 குறைந்ததுள்ளது. தற்போது முதல் ரக தக்காளியின் விலை கிலோ ரூ. 80 ஆக உள்ளது. இரண்டாம் ரக தக்காளி ரூ.70-க்கு விற்பனையாகிறது.
ALSO READ: முந்துங்கள் மக்களே! இந்த இடத்தில் தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR