புது லுக்கில் மிரட்டும் விஜய்... வந்தார் முக்கிய வில்லன் - களைக்கட்டும் லியோ செட்!

Sanjay Dutt Meets Vijay: நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த முக்கிய நடிகர் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2023, 04:34 PM IST
  • இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
  • அந்த வீடியோவில் விஜய் புது லுக்கில் காணப்படுகிறார்.
புது லுக்கில் மிரட்டும் விஜய்... வந்தார் முக்கிய வில்லன் - களைக்கட்டும் லியோ செட்! title=

Sanjay Dutt Meets Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.  படத்தின் பணிகள் ஆரம்பமாவதற்கு முன் இருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது. படக்குழு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 

எகிறும் எதிர்பார்ப்பு

இப்படத்தில், நடிகர் விஜய் உடன் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் திரிஷா, ப்ரியா ஆனந்த், நடிகர்கள் மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். நடன இயக்குநரான சாண்டி இப்படத்தில் நடிக்கிறார். 

படத்தின் தலைப்பை அறிவிக்கும்போது வெளியிட்ட டைட்டில் டீசர் முதல் ஒவ்வொரு அப்டேட்டும் விஜய் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி வருகிறது. பான் இந்திய அளவில் கவனத்தை பெற்ற லியோ படம் குறித்த செய்தி வெளியானால் அது அன்றைய தினம் வைரல் செய்திதான். 

மேலும் படிக்க | சம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல நடிகர்... ஆத்தாடி இத்தனை கோடியா...!

இறங்கியவுடன் விஜய்யை தேடிய சஞ்சய் தத்!

அந்த வகையில், லியோ படக்குழு புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, லியோ படத்தில் ஒப்பந்தமாகியிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது படக்குழுவுடன் காஷ்மீரில் இணைந்துள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் வீடியோ வெளியிட்ட அந்த வீடியோவில், விமானம் மூலம் காஷ்மீர் வரும் சஞ்சய் தத்தை, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று படப்பிடிப்பு பகுதிக்கு அழைத்து வந்தனர். காரை விட்டு இறங்கியதும் சஞ்சய் தத் விஜய்யை தேட, விஜய் அவரை வரவேற்க தயாராக இருந்தார். 

தொடர்ந்து, இருவரும் கட்டிணைத்து அன்பு பாராட்டிய பின், சிறிதுநேரம் அமர்ந்து பேசினர். தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, தயாரிப்பாளர் லலித், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் விஜய், சஞ்சய் தத்துடன் அமர்ந்து பேசினர். பின்னர், சஞ்சய் தத் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். 

இவையனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், விஜய் பெப்பர் & சால்ட் ஹேர்ஸ்டைலில் வழக்கம்போல் வசீகரமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரின் காட்சிகள் நிறைவடைந்துவிட்டதால் அவர்கள் சென்னை திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜவான் தரமான சம்பவம்..லீக்கானது ஷாருக்கானின் சண்டைக் காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News