Master திரைப்படத்தின் 5வது ப்ரமோவில் வசனத்தில் கலக்கும் விஜய் சேதுபதி & விஜய்

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில், சினிமா அரங்குகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2021, 07:27 PM IST
  • விஜயும், விஜய் சேதுபதியும் இணைந்து கலக்கும் திரைப்படம் மாஸ்டர்
  • மாஸ்டரின் ஐந்தாவது ப்ரமோ (#MasterPromo5) வெளியானது.
  • ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது ப்ரமோ
Master திரைப்படத்தின் 5வது ப்ரமோவில் வசனத்தில் கலக்கும் விஜய் சேதுபதி  & விஜய் title=

புதுடெல்லி: தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில், சினிமா அரங்குகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர். 

மாஸ்டர் திரைப்படத்தின் ஐந்தாவது ப்ரமோ இன்று வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர். இந்த ப்ரமோவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறார்.

“உலகத்தை யாரப் பார்த்து வேணுன்னாலும் பயப்படலாம். ஆனா, சாவு நம்ம நெருங்கிடுச்சுன்னா, எதிர்க்க இருக்கவன் எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது’ என்ற வசனம் பஞ்ச் வசனமாக பிரபலமாகப் போகிறது என்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது.

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படமாகும். மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ALSO READ: Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....

திரைப்பட நிறுவனம் வெளியிட்டுள்ள ப்ரமோக்களில் விஜயின் வசனங்கள் இடம்பெற்றன. இன்றைய ப்ரமோவில் மாஸ் காட்டுகிறார் விஜய் சேதுபதி.

வைரல் (Viral) ஆகிக்கொண்டிருக்கும் இந்த ப்ரமோவும் ரசிகர்களின் ஆர்வத்தையும் படத்திற்கான காத்திருப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். இவர்களைத் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், கௌரி ஜி கிஷன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Also Read | Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..!

ரசிகர்களுக்காக, படம் வெளியாவதற்கு முன்னர் பல ப்ரமோக்களை வெளியிடப்போவதாக படக்குழு கூறியிருந்தது. இரண்டாவது ப்ரமோவில் விஜயின் டயலாக்குகளை கேட்க முடிந்தது. 

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்சும் இணைந்து இயக்கியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ள இப்படம் விஜயின் முக்கியமான ஆக்ஷன் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று பேசப்படுகின்றது.

ALSO READ: தளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது... master ஆகும் dialogue

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News