Vikram: நள்ளிரவில் களைகட்டிய தியேட்டர்கள் - ஆடிப்பாடி மகிழ்ந்த ரசிகர்கள்

விக்ரம் படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2022, 08:57 AM IST
  • வெளியானது விக்ரம் திரைப்படம்
  • தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டம்
  • ரசிகர்கள் உற்சாகமாக ஆடிப்பாடினர்
Vikram: நள்ளிரவில் களைகட்டிய தியேட்டர்கள் - ஆடிப்பாடி மகிழ்ந்த ரசிகர்கள் title=

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். அதிகாலையில் திரையிடப்படும் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குவிந்த ரசிகர்கள் டிரம்ஸ், ஆடல் பாடல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை முழுவதும் விக்ரம் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டமாக இருந்தது. ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பும் குவிந்திருந்த ரசிகர்கள், ‘பத்தல பத்தல’ படத்தின் பாடலை ஒலிக்க விட்டு குத்து நடனம் போட்டனர்.

ஏஜிஎஸ், ஆல்பர்ட், வுட்லேண்ட்ஸ், ஸ்கைவால்க் என பல திரையரங்குகள் முன்பும் கொண்டாட்டமாக தான் இருந்தனர். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் ஃபகத்பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சூர்யாவின் என்ட்ரி சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்ததுபோலவே அவரின் வருகை மாஸாக இருந்தது. டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கும் விமர்சனங்களில் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

தரமான நடிகர்களை வைத்து மிகமிக தரமாக அவர் படத்தைக் கொடுத்திருப்பதாகவும், பல முன்னணி நாயகர்களை வைத்து படம் செய்வதில் கைதேர்ந்தவராக லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் உருவாகியிருப்பதாகவும் பாராட்டு மழையை பொழிந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் முன்னணி நாயகர்களை சரியாக ஹேண்டில் செய்திருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸாகியிருக்கிறது. தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News