மீனா கணவர் இறப்புக்குக் காரணம் புறாவா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

 நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது நுரையீரல் பாதிப்புக்கான காரணம் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 29, 2022, 03:46 PM IST
  • மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகர் மறைவு
  • ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி
  • மீனாவின் கணவர் மரணம் தொடர்பாக புதிய தகவல்
மீனா கணவர் இறப்புக்குக் காரணம் புறாவா? - அதிர்ச்சி ரிப்போர்ட்! title=

நடிகை மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகர் காலமாகியுள்ளார். உடல் நலக் குறைவால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

மீனாவின் கணவர் மறைவையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் வர இயலாத சூழலில் உள்ள பலர் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது இரங்கலையும் நடிகை மீனாவின் குடும்பத்துக்குத் தங்களது ஆறுதலையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வித்யாசாகருக்கு உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வித்யாசாகரைப் பொறுத்தவரை கடந்த ஜனவரியில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதையடுத்து நுரையீரலில் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருந்ததாகவும் உரிய நேரத்தில் உறுப்பு கிடைக்காததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்குப் புறா எச்சத்திலிருந்து பரவிய ஒரு வகைக் கிருமியைச் சுவாசித்ததே காரணம் எனக் கூறப்பட்டுவருகிறது. பொதுவாகவே கோழிகள் உள்ளிட்ட பறவைகளின் எச்சத்தில் ஒருவித பூஞ்சை வளருமாம். இந்த எச்சங்கள் காய்ந்து அதைச் சுத்தம் செய்யும்போது காற்றில் அதன் துகள்கள் காற்றில் பரவி, உடலில் ஒவ்வாமை, தலைவலி, காய்ச்சல், நிமோனியா உள்ளிட்டவற்றை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்! - விஜய், அஜித்துக்கு எத்தனையாவது இடம்?

 

இதில் புறா எச்சத்தால் பரவும் கிருமியானது சற்றுக் கடுமையாகப் பாதிக்கும் என்றாலும் அனைவருக்கும் உயிர்க்கொல்லி அளவுக்கான பாதகத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லிவிட முடியாது எனவும் கூறுகின்றனர். நாட்பட்ட நோயால் பாதிப்பில் உள்ளவர்கள், உடல் மிகவும் பலவீனமாக உள்ளவர்கள் போன்றோரைத்தான் இது அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படியான ஒரு வகையில்தான் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தாரா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

மேலும் படிக்க | சோனியா காந்தியின் 71 வயது உதவியாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News