வெளியானது ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் அசத்தல் ட்ரெய்லர் இன்று வெளியானது.

Last Updated : Oct 25, 2020, 03:54 PM IST
    1. தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.
    2. பூமிக்கு அம்மன் வந்தால் என்னெவெல்லம் நடக்கும் என்பதை மையமாக வைத்து படம்
    3. அரசியல் பேசும் படமாகவே மூக்குத்தி அம்மன்
வெளியானது ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் title=

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் அசத்தல் ட்ரெய்லர் இன்று வெளியானது.

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

ALSO READ | நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: ட்விட்டரில் வைரலாகும் பட ஸ்டில்கள்

இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் படமானது தீபாவளிக்கு ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸில் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியானது. பூமிக்கு அம்மன் வந்தால் என்னெவெல்லம் நடக்கும் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் பேசும் படமாகவே மூக்குத்தி அம்மன் தெரிகிறது. மேலும் மூக்குத்தி அம்மன் பட ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ALSO READ | நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News