மிஸ் இந்தியா சினி ஷெட்டி பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்

படிப்பில் ஸ்டாராக இருந்த சினி ஷெட்டி இப்போது, அழகிப் போட்டியிலும் இந்திய ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2022, 11:02 AM IST
  • மிஸ் இந்தியாவாக தேர்வாகியிருக்கும் சினிஷெட்டி
  • மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வசித்து வருகிறார்
  • சமூகவலைதளங்களில் குவியும் வாழ்த்துக்கள்
மிஸ் இந்தியா சினி ஷெட்டி பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள் title=

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா 2022 போட்டியில், மிஸ் இந்தியாவாக தேர்வாகியிருக்கிறார் சினி ஷெட்டி. மும்பையில் பிறந்தாலும், வசிப்பது கர்நாடகா. இறுதிப்போட்டியில் 31 போட்டியாளர்களை வீழ்த்தி இந்தப் பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார் அவர். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.   

சினி ஷெட்டி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி இறுதிப்போட்டியில் 31 பேர் கலந்து கொண்டனர். இதில் இந்திய அழகியாக சினி ஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அழகான உருவம், கவர்ச்சியான ஸ்டைலைக் கடந்து நடுவர்களிடம் சினி ஷெட்டி அளித்த பதில் அவரை இறுதிப் போட்டி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 

சினி ஷெட்டி பிறந்த ஊர்

இவர் பிறந்தது மும்பையில். 21 வயதாகிறது. ஆனால் வசிப்பது கர்நாடகாவில்., கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது படித்துக் கொண்டிருக்கும் அவர், பட்டய நிதி ஆய்வாளர் (CFA) படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

சினி ஷெட்டிக்கு பிடித்தது

இந்திய அழகியாக தேர்வாகியிருக்கும் சினி ஷெட்டி நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். 4 வயதிலிருந்தே நடனமாடி வருகிறார். 14 வயதிற்குள் பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்து அரங்கேற்றம் செய்திருந்தார். அவரின் நடனத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், சினிஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். கிளாசிக்கல் நடனத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கிறார்.  

அவரின் ப்ரோபைலைப் பார்த்தாலே பன்முகத் திறமையாளர் என்பதை நீங்கள் அறியமுடியும். மாடலாக மாறிய சினி ஷெட்டி, பல பெரிய விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் பாலிவுட் நாயகிகளுக்கே டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சினி ஷெட்டி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 66.3K பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இப்போது மிஸ்  இந்தியாவாக உயர்ந்துவிட்டதால், அவருக்கான பாலோவர்ஸ் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தப் போட்டியில் சினி ஷெட்டிக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தை ராஜஸ்தானின் ரூபால் ஷெகாவத் பிடித்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷினதா சவுகான் இரண்டாவது மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News