சந்தியா ராகம்: ஜானகி காலில் விழுந்து கதறிய மாயா.. சீனுவின் காதலுக்கு வந்த சிக்கல்

Sandhya Ragam Serial Update Today: ஜானகி காலில் விழுந்து கதறிய மாயா.. சீனுவின் காதலுக்கு வந்த சிக்கல் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 17, 2024, 02:30 PM IST
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் .
  • ஜானகி காலில் விழுந்து கதறிய மாயா.
  • சீனுவின் காதலுக்கு வந்த சிக்கல்.
சந்தியா ராகம்: ஜானகி காலில் விழுந்து கதறிய மாயா.. சீனுவின் காதலுக்கு வந்த சிக்கல் title=

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ரகுராமை கட்டிப்பிடித்து எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பெரியப்பா.. நான் இந்த வீட்டு பெண்ணாகவே இருக்கிறேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கிஷோர் மாயா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்று கோபப்பட ரகுராம் போதும் நிறுத்துங்க எப்ப மாயா இப்படி சொன்னாலோ அதோட அவள் எங்க வீட்டு பொண்ணு.. அவளுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன் என்று சொல்கிறார். 

பிறகு கிஷோர் மாயாவை தனியாக அழைத்துச் சென்று உனக்காக 21 வருஷத்துக்கு பிறகு இந்த குடும்பத்தை எதிர்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணேன் ஆனால் நீ இப்படி பண்ணிட்ட.. இனிமே என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார். 

இதையடுத்து ஜானகி அங்கு வர மாயா அவளது காலில் விழுந்து என்னை மன்னிச்சிடுங்க பெரியம்மா என்னால இந்த குடும்பத்துக்கு எந்த ஒரு களங்கமும் வராது. 21 வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா செஞ்ச துரோகத்தை நான் திருப்பி செய்ய மாட்டேன் என்று சொல்லி கண் கலங்கி அழ ஜானகி அவளை கட்டி பிடித்துக் கொள்கிறாள். 

மேலும் படிக்க | வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க

அதன் பிறகு மாயாவை வீட்டிற்கு அழைத்து வரும் குடும்பத்தினர் அவளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வருகின்றனர். இதைப் பார்த்த சாரு என்ன எல்லாரும் மாயாவை கொண்டாடுறாங்க அவளை நாம கைக்குள்ள போட்டுக்கணும் என்று முடிவு எடுக்கிறாள். 

யாரு மாயாவிடம் என்ன மன்னிச்சிடு மாயா.. இந்த குடும்பத்துக்காக நீ உன்னுடைய காதலையே தூக்கி போட்டுட்ட.. என்னால அப்படி செய்ய முடியாது.. உனக்கு பெரிய மனசு. உன்னை காயப்படுத்தற மாதிரி நான் நிறைய செஞ்சு இருக்கேன், அது எல்லாம் மறந்திடு என்னை மன்னிச்சிடு என்று மன்னிப்பு கேட்டு டிராமா செய்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான்..! வைரலாகும் போட்டோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News