மீண்டும் முன்னாள் காதலருடன் கைகோர்க்கும் நயன்தாரா!

முன்னாள் காதலர்களான பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது...!

Last Updated : Apr 8, 2018, 11:35 AM IST
மீண்டும் முன்னாள் காதலருடன் கைகோர்க்கும் நயன்தாரா!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 

இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினி-யின் கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ளின் ஷங்கர் படம், அஜித்-தின் சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

நடிகைகள் கண்மூடித்தனமாக காதலிப்பதும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு 'பிரேக் அப்' ஆவதுமாகவே இருக்கிறது அவரின் காதல் வாழ்க்கை. 'வல்லவன்' படத்தில் நடித்தபோது சிம்புவை கண்ணா பின்னவென காதலித்த நயன்தாரா. அதற்க்கு பிறகு 'பிரேக் அப்' ஆகி அவரைப் பிரிந்தார். 

அதற்கடுத்து, 'வில்லு' படத்தில் நடித்தபோதுஅந்தப் படத்தின் இயக்குநரான பிரபு தேவாவின் காதலில் விழுந்தார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா, காதலுக்காக மதம் மாறவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதலால் பிரபுதேவா தனது காதல் மனைவியைப் பிரிந்தார். இருவரும் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென பிரிந்த்தனர்.

'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றித் திரிகின்றனர். இருவருக்கும் ரகசியமாக நிச்சயாதார்த்தமும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், முன்னாள் காதலரான பிரபுதேவாவுடன் மீண்டும் நயன்தாரா இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து 'போக்கிரி', 'வில்லு' போன்ற படங்களை இயக்கியிருக்கும் பிரபு தேவா, அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். இதில், நயன்தாராவை நடிக்க வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.  

மனக்கசப்பால் பிரிந்த பிரபுதேவாவும், நயன்தாராவும் எப்படி இணைவார்கள்? என்று கேள்வி எழலாம்? தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பது நயன்தாராவின் கொள்கை. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடித்தார். அது போல தான் பிரபு தேவாவின் படத்திலும் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News