நீட் தேர்வு குறித்து எழுந்த சர்சைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை!

நீட் தேர்வு குறித்து எழுந்த சர்சைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை பற்றி இன்றைய நாளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது!

Last Updated : May 6, 2018, 09:14 PM IST
நீட் தேர்வு குறித்து எழுந்த சர்சைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை! title=

20:56 06-05-2018

நீட் தேர்வு எழுத மகளை அழைத்துச் சென்றவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பசுமலை மையத்துக்கு சென்று திரும்பும் போது கண்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


18:53 06-05-2018

நீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்று, உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் போதாது என்பதால் நிதியுதவியை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


17:33 06-05-2018
உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மகனை நீட் வெற்றி இன்றி தமிழக அரசால் மருத்துவராக்க முடியுமா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, நீட் தேர்வை அறிவித்தபோதே அனுமதிக்க முடியாது என மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் தமிழகத்திலேயே போதிய நீட் தேர்வு மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


16:02 06-05-2018
மதுரை நரிமேட்டில் இந்தியில் நீட் வினாத்தாள் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 120 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அவர்களுக்கு தமிழில் வினாகத்தாள் கொண்டு வரப்பட்டு 5 மணி நேரத்துக்கு பின்னர் தேர்வு நடைபெற்றது தற்போது முடிவு பெற்றது. 


15:04 06-05-2018
மாணவர் மகாலிங்கம் தந்தை மரணம் குறித்து கேரள முதல்வருடம் கமல் பேசிவருகிறார். மேலும், மாணவர் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்து சேரும் வரை மக்கள் நீதி மய்யம் உதவும் என கமல் தெரிவித்துள்ளார். 


15:04 06-05-2018

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டை சேர்ந்தவர். 

இதையடுத்து, தேர்வு மையத்திலிருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

சர்ச்சை மற்றும் உயிர் பலிக்கு இடையே நீட் தேர்வு முடிவடைந்துள்ளது. இந்தியா முழுவதும் 2255 மையங்களில் 13,26,725 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் 1.07,288 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் பெற்றோர்களுடன் விடிய விடிய தேர்வு மையங்களை தேடி சென்றடைந்தனர். கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

இம்மாநிலங்களில் தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் கடும் கெடுபிடிகளுடன் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் நீட் வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டன என்று தகவல் தெரிவிதுள்ளனர்.

மேலும், நீட் வினாத்தாளில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து பெரியளவில் கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உயிரியல் பாடபிரிவில் கேள்விகள் எளிதாக இருந்தது என்றும் குறியுள்ளனர்.

Trending News