எதிர்வரும் கர்நாட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக-வை தவிர்து 3-வது அணிக்கு வாய்ப்பளிக்க மக்கள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ANI செய்தி நிறுவனம், கர்நாடக மக்களிடம் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த தங்களது கருத்துகளை கேட்டுள்ளது.
அப்போது மக்கள் தெரிவித்துள்ளதாவது... "ஆளும் காங்கிரஸ் ஆட்சி இங்குள்ள இஸ்லாமிய, ஹிந்து மக்களிடையே பாகுபாடினை ஏற்படுத்தும் வகையிலேயே செயல்பட்டு வருகிறது. குடிபதற்கு தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வேறு காரியங்களை தான் பார்த்து வருகின்றனர். அதேப்போல் பாஜக-வும் தங்கள் சுயநல போக்கிலேயே செயல்பட்டு வருகின்றனர. இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்துடன் வரும் 3-வது கட்சிக்கு வாய்ப்பளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என தெரிவித்துள்ளனர்.
All that Siddaramaiah has done is create divide between Hindus and Muslim here. There are many problems here, including scarcity of drinking water problems : Fazal, Local from Mangalore #KarnatakaElection2018 pic.twitter.com/N7aRljfiDa
— ANI (@ANI) April 28, 2018
கர்நாடகா தேர்தல் 2018...
- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
- வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
- கர்நாடக தேர்தல் - மே 12, 2018
- வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
- 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.