ஆதார் கார்டில் முகவரி மாற்ற இந்த ஆணவம் இனி தேவையில்லை

ஆதார் கார்டில் இனி குடும்ப உறுப்பினர்களின் முகவரியை மாற்ற வேண்டியிருந்தால், முகவரி சான்று இல்லாமலேயே மாற்றலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2023, 08:09 PM IST
ஆதார் கார்டில் முகவரி மாற்ற இந்த ஆணவம் இனி தேவையில்லை title=

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை. நாட்டில் ஒவ்வொரு வேலைக்கும் இது மிகவும் அவசியமாகிவிட்டது. அதனால்தான் UIDAI ஆதார் அட்டை தொடர்பான புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் அட்டை பயனர்களுக்கு எந்தவிதமான சிரமங்களையும் தவிர்க்க நிறைய வசதிகளை வழங்குகிறது. 

இப்போது நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முகவரியை மிக எளிதாக புதுப்பிக்கலாம். அதாவது, ஆதார் அட்டையின் உதவியுடன், பிற குடும்ப உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ஆதார ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடும்பத் தலைவர் ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிக்க முடியும். ஆனால் குடும்ப உரிமையாளரின் ஆதார் அட்டை முகவரி புதுப்பிக்கப்பட வேண்டும். 

மேலும் படிக்க | வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா?

தந்தை, தாய், மகள், மகன், மனைவி போன்ற குடும்பத்தின் உரிமையாளருடன் நபரின் உறவைப் பதிவு செய்ய வேண்டும். சரிபார்ப்புக்கு வீட்டு உரிமையாளரின் பயோமெட்ரிக் கைரேகைகள் தேவை. அதாவது ஆதார் சேவகேந்திராவில் முகவரி புதுப்பிக்கும் போது குடும்பத்தின் உரிமையாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

உங்களின் உறவு முறையை நிரூபிக்க பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது பிடிஎஸ் கார்டு, அல்லது ஓய்வூதிய அட்டை, திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால், உங்களின் உறவு குறித்து குடும்ப உரிமையாளரால் வழங்கப்பட்ட சுய அறிவிப்பு ஆவணம் போதுமானது. ஆனால் இது மூன்று மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆதார் அட்டை முகவரியை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News