ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ்... அடுத்து இவர் தான் கேப்டனாம்...

IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Aug 07, 2024, 09:21 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும், கடந்த 4 சீசன்களாக தொடர்ந்து சொதப்பி வருகிறது. 

 

1 /8

ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் இன்னும் உறுதியாகவில்லை.  

2 /8

அந்த வகையில், 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்ற தற்போதைய விதியே தொடரும்பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அதன் முக்கிய வீரரும், கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) விடுவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   

3 /8

2 இந்தியர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்தியர்கள், 1 வெளிநாட்டு வீரர் என்ற இந்த காம்பினேஷனிலேயே அணியில் வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது.   

4 /8

கடந்த தொடரில் குஜராத் அணியிடம் இருந்து டிரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார். ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) கேப்டன்ஸி பறிக்கப்பட்டு ஹர்திக் கேப்டன் ஆனார். இருப்பினும் மும்பை கடந்த தொடரில் 10ஆவது இடத்தில்தான் நிறைவு செய்தது.   

5 /8

அதன்பின், ரோஹித் சர்மா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்றதன் பின்னரும், கம்பீர் வருகைக்கு பின் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மும்பை அணியின் கேப்டனாக்கப்பட்டதன் பின்னரும் மும்பை இந்தியன்ஸ் முகாமில் பெரிய விவாதமே தொடங்கியிருக்கிறது.   

6 /8

ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்தால் ரோஹித் சர்மாவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் (தற்போதைய விதியின் கீழ்). மேலும், ஹர்திக்கின் கேப்டன்ஸியிலும் பிரச்னை இருப்பதால் அணி நிர்வாகம் பயங்கர யோசனையில் இருந்துள்ளது.  

7 /8

எனவே, வீரர்களை தக்கவைக்கும் விதிகளில் பெரியளவில் மாற்றம் செய்யப்படாவிட்டால் ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து விடுவித்துவிட்டு, சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கலாம் என மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

8 /8

சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா ஆகியோருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியத்துவம் அளிக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இவை அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.