Blood Clot Risk: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவு

கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்  கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, ரத்தக் கட்டிகளின் தீவிரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 01:33 PM IST
  • கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவு
  • குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
  • தடுப்பூசி போடுவது கொரோனாவைத் தவிர வேறு பல ஆரோக்கிய நலன்களை தருகிறது
Blood Clot Risk: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவு title=

ரத்தக் கட்டிகளின் தீவிரம் என்பது, கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்  கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் (பிஎம்ஜே) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா போன்ற கோவிட் -19 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு தீவிர ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் குறைந்திருக்கிறது. கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, த்ரோம்போசைட்டோபீனியா (thrombocytopenia) -குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை (platelet counts) தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர்-பயோடெக் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள், மற்றும் கோவிட் -19 தடுப்பூசியை போடாதவர்களுக்கு ஏற்படும் ரத்தக் கட்டிகள் பற்றிய ஆய்வை நடத்தியது.

READ ALSO | Robatic usage in Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்

இதன் அடிப்படையில், இந்தியாவின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இரண்டு தடுப்பூசிகளின் முதல் டோஸைப் பெற்ற 29 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசிக்குப் பிறகு பாதகமான நிகழ்வுகளின் விகிதங்களும் ஒப்பிடப்பட்டன.

இந்த இரண்டு தடுப்பூசிகளிலும், முதல் டோஸைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில், மருத்துவமனையில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிலருக்கு இதனால் ரத்தம் தொடர்பான பாதகமான நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.

"COVID-19 தடுப்பூசிக்குப் பிறகு இந்த அதிகரித்த அபாயங்களைப் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும். அதோடு, வித்தியாசமான அறிகுறிகளை உருவாக்கினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், ஆனால் SARS-CoV-2 நோயால் பாதிக்கப்பட்டால் ஆபத்துகள் கணிசமாக அதிகரிப்பதோடு, பாதிப்பு நீண்ட காலம் தொடர்கிறது. இந்த பாதகமான நிகழ்வுகளின் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது.  

ALSO READ | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News