Monkeypox Vaccine: குரங்கம்மை நோய்க்கு ஜின்னியோஸ் தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது

Monkeypox Vaccine Effective: நீடித்த நோயெதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியைப் போடலாம் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நம்பிக்கை அளிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2022, 06:18 AM IST
  • குரங்கம்மை நோய்க்கு ஜின்னியோஸ் தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது
  • நீடித்த நோயெதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 28 நாட்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி போடலாம்
  • அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அளிக்கும் நம்பிக்கை
Monkeypox Vaccine: குரங்கம்மை நோய்க்கு ஜின்னியோஸ் தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது title=

நியூயார்க்: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குரங்கம்மை நோயின் தாக்கம், அமெரிக்காவில் 25,000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் போல பரவலாக பாதிப்பை இந்த நோய்த்தொற்றும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உலகமே கவனமாக இருக்கிறது. நோயைத் தடுக்க ஆராய்ச்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாக எடுக்கப்பட்டுள்ளன. குரங்கு அம்மை தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், முதல் டோஸ் செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் இது பாதுகாப்பு அளிக்கத் தொடங்கி விடுவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று (புதன்கிழமை, செப்டம்பர் 28) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்த நிறுவனம், பூர்வாங்க பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 3 க்கு இடையில், தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு குரங்கு பாக்ஸ் நோய் வருவதற்கான ஆபத்து 14 மடங்கு அதிகமாக இருப்பதாக நிறுவனம் கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 32 இடங்களில் இருந்து கிடைத்த, உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

தற்போதைய வெடிப்பில், அமெரிக்காவில் 25,000 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை நோய்த்தொற்றுகள் காணப்படுகின்றன. இந்த ஆண்டு மே மாதம் வெடிப்பு தொடங்கியது என்பதற்கு இடையில் இந்த் புதிய தரவானது, புதிய தடுப்பூசி நமது ஆவலை பூர்த்தி செய்வதாக காணப்படுகிறது. இது நம்பிக்கையை வழங்குகிறது" என்று CDC இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

"இந்த நம்பிக்கைக்குரிய தரவுகளின் வெளிச்சத்தில், குரங்கு காய்ச்சலுக்கு எதிராக, நீடித்த நோயெதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியைப் பெறுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | Monkeypox Alert: மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்!

ஜின்னியோஸ் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட போதிலும், குரங்கு பாக்ஸுக்கு எதிரான இந்த தடுப்பூசிக்கான உறுதியான செயல்திறன் மதிப்பீடு இன்னும் கிடைக்கவில்லை, ஏனெனில் முந்தைய ஆய்வுகள் விலங்குகள் மீதான சோதனை ஆய்வு முடிகளின் அடிப்படையில், மனித நோயெதிர்ப்பு தரவை மதிப்பிட்டன.  

உலகளவில் 66,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆகஸ்ட் முதல் புதிய தொற்றுகள் ஏற்படும் விகிதம் குறைந்து வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 680,000 க்கும் மேற்பட்ட டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபாடுள்ள மக்களுக்கு, இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | Monkeypox தடுப்பூசிகள் முழுமையாக பயனளிப்பதில்லை: அதிர்ச்சியூட்டும் WHO

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News