மனிதர்களின் பொறுப்பற்ற, அலட்சியமான செயல்களால், வன விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவை பெரிது பாதிக்கப்படும் அவல சம்பவங்கள் அவ்வவ்ப்போது வெளிவந்து நம்மை வேதனையின் ஆழ்த்துகின்றன. அதே போன்ற மற்றோரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானேயில் ஒரு சிறுத்தை குட்டியின் தலை பிளாஸ்டிக் தண்ணீர் கொள்கலன் ஒன்றில் சிக்கி கொண்டதை அடுத்து, சுமார் 48 மணி நேரம், அந்த சிறுத்தை மிகுந்த வேதனையை அடைந்து தவித்து வந்த நிலையில், சிறுத்தையை கண்ட ஒரு நபர், அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, வனத்துறையின் கவனத்திற்கும் மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
இதை அடுத்து வன அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய சவாலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில், கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு சரியாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ, குடிக்கவோ முடியாமல் சோர்ந்து போன நிலையில் இருந்த சிறுத்தை குட்டியை மீட்டனர்
வழிப்போக்கர் பகிர்ந்த வீடியோவில், தலையை கொள்கலனில் இருந்து விடுவிக்க சிறுத்தை தீவிரமாக போராடுவதையும், வேதனையில் அங்கு இங்கும் செல்வதையும் காணலாம். வீடியோ மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சிறுத்தைக்குட்டி காட்டுக்குள் சென்று விட்டது.
மேலும் படிக்க | Viral Video: சிங்கிளாக வந்த சிங்கம்; வேட்டையாடியதா; விட்டுச்சென்றதா!
வீடியோவை இங்கே காணலாம்:
Irresponsible behaviour of tourist and people venturing into forest to party is posing a grave threat to the wild animals. A Leopard with its head stuck inside a plastic jar was spotted near Badlapur in Thane district. @MahaForest has begun the search operation. @AUThackeray pic.twitter.com/2O0CIYcSYT
— Ranjeet Jadhav (@ranjeetnature) February 15, 2022
வனத்துறை அதிகாரிகள், சஞ்சய் காந்தி தேசிய பூங்கா (SGNP), வனவிலங்கு நலனுக்கான ரெஸ்கிங்க் அசோசியேஷன் (RAWW) உறுப்பினர்கள் மற்றும் சில கிராம மக்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தையை, கண்டுபிடிப்பது மிகப்ப்பெரிய சவாலாக இருந்தது. மேலும், சிறுத்தைக் குட்டி மனித குடியிருப்புக்குள் நுழையக்கூடும் என்று மீட்புப் பணியாளர்கள் அஞ்சினர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பத்லாபூர் கிராமத்திற்கு அருகே சிறுத்தை குட்டி மீண்டும் காணப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், வண அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
சிறுத்தையை நோக்கி மயக்க ஊசி போடப்பட்டு மயக்கமடைந்ததை அடுத்து, மீட்பு குழுவினர் பிளாஸ்டிக் கேனை அகற்றினர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை சிறுத்தை குட்டி கண்காணிப்பில் வைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறினர்.
மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR