யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் என விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிபுனர்கள் கூறுகின்றனர். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியானை ஒன்று நடை பயில கற்றுக் கொள்ளும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. தாய் யானை, குட்டி யானை மிகவும் சிரம்ப்படுவதை பார்த்து கவலை கொள்வதையும் விடியோவில் காணலாம்.
வைரலாகும் குட்டியானை வீடியோவை கீழே காணலாம்:
மேலும் படிக்க | Viral Video: பாம்பின் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்யும் சின்னஞ்சிறு பறவை!
நிலத்தில் வாழும் பெரிய விலங்கினம் யானை. யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது. இந்த வீடியோவைப் பார்த்த சமூகவலைத்தள வாசிகள் அற்புதமாக உள்ளது என்று கூறி கருத்திட்டு வருகின்றனர். வைரலான இந்த வீடியோ, Latest Sightings - Cute & Cuddly கணக்கின் மூலம் பகிரப்பட்ட காணொளி ஆகும். இந்த வீடியோவை ஏற்கனவே 508K பேர் பார்த்துள்ளனர். பலர் தங்கள் கமெண்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!
மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ