கர்ப்பமாக இருந்தா என்ன; தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் எமி!

நிறைமாத கர்ப்பமாக இருந்தாலும் தனக்கு பிடித்த மாடலிங்கை கைவிடாது செய்து கொண்டிருக்கும் எமிஜாக்சன்!

Updated: Sep 14, 2019, 02:42 PM IST
கர்ப்பமாக இருந்தா என்ன; தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிக்கும் எமி!

நிறைமாத கர்ப்பமாக இருந்தாலும் தனக்கு பிடித்த மாடலிங்கை கைவிடாது செய்து கொண்டிருக்கும் எமிஜாக்சன்!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன். தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், லண்டனுக்கே மீண்டும் சென்ற அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இதற்கிடையே  எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வந்த எமி, கர்ப்பமான பின்பும் அதே போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், நிறைமாத கர்ப்பத்துடன் இருக்கும் நிலையிலும் மாடலிங்கை கைவிடாத எமிஜாக்சன்,  சமீபத்தில்  மாடலிங்காக எடுக்கப்பட்ட  புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

WorkingMomsss 

A post shared by Amy Jackson (@iamamyjackson)  on