மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!!

சமீபத்திய நாட்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 6, 2021, 04:01 PM IST
மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!!

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீபத்திய நாட்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

தற்போது திருமண சீசன் நடந்து வருகிறது. திருமணம் என்றாலே வேடிக்கை, கிண்டல் கேலி என பல விதமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு திருமண வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில், திருமண நாளில், ஒரு மணமகன் தனது மணமகளுக்கு மேடையில் மாலை அணிவிப்பதைக் காண முடிகின்றது. ஆனால் அதற்கு பின்னர் நடப்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளது.

திருமண நாள் (Wedding Day) மணமகன், மணமகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு விசேஷமானது. அதுவும், மணமகன் மற்றும் மணமகளுக்கு இது மறக்க முடியாத தினமாக இருக்கும். மணமகனும், மணமகளும் தங்கள் திருமண நாள் மிகச்சிறப்பாக, வித்தியாசமாக அமைய வேண்டும் என நினைப்பார்கள். 

சில சமயங்களில் திருமண மேடைகளிலேயே யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து விடுகின்றன. இந்த வீடியோவிலும் அப்படி ஒரு விஷயம்தான் நடந்துள்ளது.

மணமகள் மணமகனின் மீது மண மாலையை எறிந்து விட்டு சென்றார்

ஒரு திருமண மேடையில் ஒரு மணமகன் தனது மணமகளுக்கு மிகுந்த அன்புடன் மாலை அணிவிப்பதை வீடியோவில் காண முடிகிறது. மணமகன் மணமகளுக்கு மாலை அணிவித்தவுடன், மணமகள் திடீரென்று கோபமடைந்தார். இதைத் தொடர்ந்து மணமகனின் மீது மாலையை வீசிவிட்டு அவர் நேராக மேடையில் இருந்து கீழே இறங்குகிறார். இதை பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். இந்த காட்சியை அருகில் இருந்தவர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ALSO READ:வைரலாகும் SpiceJet விமான பணிப்பெண்ணின் நடன வீடியோ! 

வீடியோவைப் பார்த்தவுடன் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்

இருப்பினும், அடுத்த நொடியில் ஒரு விஷயம் நடக்கிறது. இதைப் பார்த்தால் தலை சுற்றக்கூடும்!! இந்த மேடையில் நடப்பதைப் பார்த்தால், 'இது என்ன டிராமா?' என கேட்கத் த் தோன்றும். 

ஏனென்றால், அடுத்த கணமே மணமகள் மீண்டும் மேடைக்கு வருகிறார். சுற்றி இருப்பவர்கள்  சிரிக்கத் தொடங்குகிறார்கள். உண்மையில், மணமகள் மணமகனை கிண்டல் செய்து ஏமாற்ற இவ்வாறு செய்துள்ளது தெரிய வருகிறது. இதற்கு முன், இதுபோன்ற வேடிக்கைகளை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

திடீரென மாலையை தன் முகத்தில் எறிந்துவிட்டு எழுந்துபோன மணமகளைப் (Bride https://zeenews.india.com/tamil/social/viral-video-bride-gets-make-up-fo...) பார்த்து மணமகன் வியந்து நிற்பதை வீடியோவில் பார்க்க முடிகின்றது. அவரது மன நிலை அப்போது எப்படி இருந்திருக்கும்? இது வேடிக்கை என தெரிந்ததும் அவருக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்? வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவை பார்ப்பவர்களின் மன நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான் உள்ளது!! 

 

ALSO READ:அந்தரங்க ‘பகுதிக்குள்’ நுழைந்த இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு; நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News