Viral Video:இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக திருமண நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அனைவருக்கும் திருமணம் (Marriage) என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். மணமகனாக இருந்தாலும் சரி, மணமகளாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் திருமண நாளில் அழகாக இருக்க விரும்புகிறார்கள். திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும்.
இருப்பினும், திருமணங்கள் நீண்ட காலமாக மணமகளின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையவை மற்றும் பெரும்பாலும் மணமகளையே மையமாகக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக, அழகு, அலங்காரம் ஆகிய விஷயங்களில் மணமகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
திருமண ஆடைகள், கூந்தல், ஒப்பனை என பல விஷயங்களில் மணப்பெண்கள் பல மாதங்களை செலவிடுகிறார்கள். திருமண நாள் அன்று அவர்களை அழகாக அலங்கரிக்க, தயார் செய்ய பலர் சிறப்பாக பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
ஆனால், மறுபுறம், மணமகன்கள் தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்கிறார்கள். ஆனால், இன்றைய நாட்களில் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன. இன்று, மணமகன்களும் தங்கள் அலங்காரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ALSO READ: Cobra Viral Video: வீட்டிற்குள் புகுந்தது 15 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப்பாம்பு
அப்படிப்பட்ட ஒரு வீடியோ (Video) தற்போது வைரல் ஆகியுள்ளது. ஒரு மணமகன் தனது திருமணத்திற்காக உற்சாகமாக மேக்கப் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவில், மணமகன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. மேலும் மணமகன் கவனமாக ஒப்பனை செய்துகொள்வதையும் அதில் காண முடிகின்றது. மேக் அப் செய்துகொள்ளும் மணமகன், “பெண்கள் இவ்வளவு அதிக நேரம் மேக் அப் செய்துகொள்ளும்போது, ஆண்கள் ஏன் செய்துகொள்ளக்கூடாது?” என்று கேட்கிறார்.
இதற்கிடையில், மணமகள் விளையாட்டுத்தனமாக மணமகனிடன், “நீங்கள் மட்டும் அலங்காரம் செய்துகொண்டால் போதுமா? நான் இப்படியே வரட்டுமா?” என்று கிண்டலாக கூறுவதையும் காண முடிகின்றது.
இந்த வீடியோ (Viral Video) இன்ஸ்டாகிராமில் Thebridesofindia என்ற கணக்கால் பகிரப்பட்டது. ”மாப்பிள்ளை தயாராக உற்சாகமாக இருந்தால்.. இப்படிதான் நடக்கும்...” என இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. மேலும் மணமகன் மற்றும் மணமகளின் வேடிக்கையான கேலிப்பேச்சை மக்கள் விரும்புகிறார்கள். பலர் மணமகனுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும், பலர் அவர் மேக் அப் போட்டுக்கொள்வதில் உறுதியாக இருப்பதை பாராட்டுகிறார்கள்.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஒரு பயனர், "நாங்கள் இதை ஆதரிக்கிறோம், எங்கள் அனைவருக்கும் இது வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில், "ஹாஹா அது மிகவும் அருமையாக இருக்கிறது! உண்மையாகவே மணமகள் மட்டும் ஏன் மேக் அப் போட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? எங்களுக்கும் அந்த உரிமை உண்டு” என்று எழுதியுள்ளார்.
பலர் ஹார்ட் இமோஜிக்களால் கமெண்ட் செக்ஷனை நிரப்பியுள்ளனர்.
ALSO READ: Gold of God:கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழக அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR