பேருந்து கட்டண உயர்வு: அரசு அதிகாரத்தில் இருந்து விலகுமா? ஜூலி டுவிட்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பிக் பாஸ் பிரபலம் ஜூலி டுவிட் செய்துள்ளார்

Last Updated : Jan 24, 2018, 05:58 PM IST
பேருந்து கட்டண உயர்வு: அரசு அதிகாரத்தில் இருந்து விலகுமா? ஜூலி டுவிட் title=

தமிழக அரசு கடந்த 19-ம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அந்த கட்டண உயர்வு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பல அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பேருந்து கட்டண உயரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு பிரபலமான ஜூலி அவர்கள், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தனது ட்விட்டார் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் கூறியதாவது,

பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இதுவும். இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Trending News