மீண்டும் வருகிறாதா Rush Hour; சிக்னல் கொடுத்த ஜாக்கிசான்!

ஜப்பானிய சீன படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜாக்கிசானை முதன்முறையாக ஹாலிவுட் படங்களுக்கு அழைத்து வந்த திரைப்படம் Rush Hour!

Last Updated : Apr 8, 2019, 08:52 PM IST
மீண்டும் வருகிறாதா Rush Hour; சிக்னல் கொடுத்த ஜாக்கிசான்! title=

ஜப்பானிய சீன படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜாக்கிசானை முதன்முறையாக ஹாலிவுட் படங்களுக்கு அழைத்து வந்த திரைப்படம் Rush Hour!

இதுவரை Rush Hour திரைப்படம் 3 பாகங்களை வெளியிட்டுள்ளது. மூன்று திரைப்படங்களும் மெஹா வெற்றி பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 4-வது பாகம் தற்போது உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிகுறியாக இப்படத்தில் நடித்த நடிகர்கள் ஜாக்கிசான் மற்றும் கிறிஸ் டர்கர் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருவரும் தங்களது நான்கு விரல்களை நீட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர், ஆனால் ரசிகர்கள் இது Rush Hour திரைப்படத்தின் நான்காம் பாகத்திற்கான அறிகுறிதான் என குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் புகைப்படத்தை வெளியிட்ட கிறிஸ் இந்த புகைப்படம் ஜாக்கிசானின் பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ctuckerworld (@christucker) on

உலக ரசிகர்களை பெரிதும் கவர்ந்த Rush Hour திரைப்படம், புதிய படைப்பாக வந்தால் அரிமை தானே...

Rush Hour திரைப்படதிதன் முதல் பகுதி 1998-ஆம் ஆண்டு வெளியானது, இதனை தொடர்நுத இரண்டாம் பாகம் 2001-லும், மூன்றாம் பாகம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்துக்கது.

Trending News