பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு!

பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!

Updated: Sep 6, 2019, 10:14 AM IST
பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு!

பிரபல ராப் பாடகி Nicki Minaj, இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!

தனது குடும்பத்தை கவனிக்க வேண்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக Nicki Minaj, தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

36-வயது ஆகும் Nicki Minaj, ட்விட்டரில் தன்னை பின்தொடரும் சுமார் 20 மில்லியன் ரசிகர்களுக்கு இந்த அதிர்ச்சியூட்டும் தகவலினை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "எனது குடும்பத்தை இனி கவனிக்க வேண்டி, இசை துறையில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். என் வாழ்நாள் முடியும் வரை என்னை மறவாமல் இருப்பீர் எனவும் நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம், Nicki Minaj தனது நெடுநாள் காதலர் Kenneth “Zoo” Petty-யை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை Mrs.Petty என மாற்றிக்கொண்டார். எனினுன் தனது திருமணம் குறித்த அறிவிப்பினை அவர் வெளியிடவில்லை. 

இணையத்தில் கசியும் தகவல்களின் படி Nicki Minaj, திருமணம் ஆகி கருவுற்று இருக்கலாம். இதன் காரணமாக தனது பாதையில் இருந்து விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. 

கவர்சிகரமான பாடல் காட்சிகளுக்கு சொந்தக்காரரான Nicki Minaj, கடந்த 10 ஆண்டு காலமாக ராப் துறையில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். இவரது முதல் ஆல்பமான “Pink Friday” வெளிப்படையான கருத்துகளையும், பெருத்த ஆதரவினையும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில பெண் ராப்பர்களில் ஒருவரான Nicki Minaj ஆறு முறை அமெரிக்க இசை விருதுகளை வென்றார், “American Idol” நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய நீதிபதி என பெயர் பெற்றவர். மேலும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் "2016 Time 100" பட்டியலில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.