சிறுத்தையின் கழுத்தை கவ்விய முதலை: கேமராவில் கைதான களேபரம்

Animal Fight Video: பீதியை கிளப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காட்டு விலங்குகளுக்கு இடையில் நடக்கும் தீவிர சண்டையை இதில் காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2023, 11:59 AM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • காட்டில் எந்த இடமும் பாதுகாப்பான இடமே இல்லை என்பதை இந்த வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது.
சிறுத்தையின் கழுத்தை கவ்விய முதலை: கேமராவில் கைதான களேபரம் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

வன விலங்குகள் பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்படுகின்றன. காட்டு விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சண்டைக்காட்சிகள் சில சமயம் மனிதர்களின் சண்டைகளை மிஞ்சும் வகையில் அமைந்து விடுகின்றன. காட்டு விலங்குகளும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், மற்ற விலங்குகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிறிய தவறு செய்தால் கூட, அந்த விலங்குகள் தங்கள் உயிரையே விலையாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

தற்போது மனதை பதபதைக்க வைக்கும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. காட்டில் எந்த இடமும் பாதுகாப்பான இடமே இல்லை என்பதை இந்த வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது. 

மேலும் படிக்க | நாகப்பாம்பு VS கீரி.. வெற்றி யாருக்கு: மிரள வைக்கும் வைரல் வீடியோ 

தற்போது வைரலான வீடியோவில், ராட்சத முதலையின் அற்புதமான வேட்டையாடும் திறனை நாம் காண முடிகின்றது. அது அதன் இரையை மிகுந்த சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் தாக்குகிறது. வீடியோவின் தொடக்கத்தில், ஒரு சிறுத்தை ஒரு குளத்தின் கரையில் தண்ணீர் குடிப்பதைக் காண்கிறோம். தண்ணீரும் எந்த வித சலனமும் இல்லாமல், சுற்றிலும் அமைதியாக உள்ளது. அடுத்த கணமே அனைத்தும் மாறி விடுகின்றது. ஒரு வலிமையான முதலை திடீரென தண்ணீரிலிருந்து வெளியே வந்து அதைத் தாக்கி சிறுத்தையின் தலையைப் பிடிக்கிறது. சிறுத்தையை அதன் தாடையில் பிடித்துக்கொண்டு முதலை குளத்துக்குள் மறைந்துவிடுகிறது. இந்தக் காட்சியை பார்க்க பீதியை கிளப்பும் வகையில் உள்ளது. 

கிலியூட்டும் வீடியோவை இங்கே காணலாம்: 

முதலை சிறுத்தையை தாக்கியது

முதலை திடீரென சிறுத்தையை தாக்கும் விதத்தை பார்த்தால் அனைவருக்கும் அச்சம் ஏற்படும். இந்த கிலியூட்டும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த சிறுத்தைக்கு தன் தாகம் தணிந்த அடுத்த கணம் தனது உயிர் போகப்போகிறது என்பது புரியவில்லை. 

காட்டில் ஒரு கணம் நம் கவனம் அகன்றாலும், அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். காட்டின் அபாயத்தை உணர்த்தும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | குரங்கு கையால் ஆப்பிள் சாப்பிடும் ஆமை: நெகிழவைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News