புலியிடம் பாசத்தை பொழிந்த சின்னப் பையன்... பதிலுக்கு புலி என்ன பண்ணுச்சு பாருங்க!

Cute Tiger Viral Video: மிருகக்காட்சிசாலையில் பயங்கரமான புலி ஒன்றுடன் சிறுவன் சேட்டை செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 6, 2024, 06:55 PM IST
  • இந்த வீடியோ X தளத்தில் வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவுக்கு 2 கோடிக்கும் மேல் வியூஸ் உள்ளது.
  • இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது.
புலியிடம் பாசத்தை பொழிந்த சின்னப் பையன்... பதிலுக்கு புலி என்ன பண்ணுச்சு பாருங்க! title=

Cute Tiger Viral Video: சீனாவின் கிழக்குப் பிரதேசத்தல் உள்ள மிருகக்காட்சிசாலையில் மிகப்பெரிய புலி ஒன்றுடன் சிறுவன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் சேட்டையை மட்டுமின்றி புலியின் விளையாட்டுத் தனத்தையும் கண்டு நெட்டிசன்கள் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர். வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து இதில் பார்க்கலாம். 

சீனாவின் செஜியாங் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹுசௌ நகரில்தான் அந்த வீடியோவில் காணப்படும் மிருகக்காட்சிசாலை இருக்கிறது. அங்கு கடந்தாண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மிருகக்காட்சிசாலையில் பிரம்மாண்ட தோற்றத்தில் இருக்கும் புலியுடன், ஒரு சிறுவன் விளையாடுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

புலியிடம் பாசத்தை பொழிந்த பையன்...

இருவருக்கும் இடையில் கண்ணாடி சுவர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த கண்ணாடி சுவர் கொண்ட கூண்டில் புலி இருக்க, அந்த சிறுவனோ கண்ணாடியின் பக்கத்தில் நின்று அச்சமில்லாமல் புலியிடம் விளையாட்டு காட்டுகிறான். அந்த சிறுவன் செய்வதை பார்த்த புலியும், கண்ணாடி பக்கம் வந்து சிறுவனிடம் விளையாடுகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு கொட்டாவி விட்டு பார்த்திருக்கீங்களா... நெட்டிசன்களை வியக்க வைத்த வீடியோ

சிறுவன் இரு கைகளையும் கொண்டு கண்ணாடியில் தட்டி தட்டி விளையாடுவதை போல், அந்த புலியும் சிறுவனை பின்பற்றி தட்டி தட்டி விளையாடுவது பார்ப்பரை ரசிக்க வைத்தது. ஒரு பிரம்மாண்ட புலியின் முன்னர் நிற்பதால் கொஞ்சம் கூட பயமின்றி நிற்பது, வீடியோ பார்த்த பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ யாரால் முதலில் பகிரப்பட்டது என்பது தெரியவில்லை.

வைரலான வீடியோ

@TheFigen_ என்ற X தள பயனரால் இணையத்தில் பகிரப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை அந்த பக்கத்தில் மட்டும் 2 கோடிக்கும் மேலான வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோ @EcoVibeExplorer என்ற X தள பயனரிடம் இருந்து இந்த பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை எப்போது, யார் எடுத்தது என்ற தகவல்கள் ஏதும் இல்லை. 

இணையம் முழுவதும் மிருகங்கள் குறித்து இதுபோன்ற வீடியோக்கள் நிரம்பியிருக்கின்றன. வனவிலங்குகள் தொடங்கி செல்லப்பிராணிகள் வரை  பலவற்றின் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் என பல சமூக வலைதளங்களில் நீங்கள் பார்க்கலாம். மனிதர்கள் அடர்ந்த காடுகளுக்கோ, மலைப் பகுதிகளுக்கோ செல்ல முடியாது என்பதால் அந்த குறையை இணையத்தில் இந்த வீடியோக்கள்தான் நிவர்த்தி செய்கின்றன. 

முன்பெல்லாம் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனல், நேஷ்னல் ஜியோகிராபி சேனலில் மட்டும் பார்த்து வந்த பல காட்சிகள் இப்போது உங்களின் மொபைலிலேயே வந்துவிட்டது. வனவிலங்குகள் வேட்டையாடுவது, காடுகளில் விலங்குகளின் வினோத நடத்தைகள், உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகளின் வலசைப் பயணம் உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்ளவும் இந்த வீடியோக்கள் பெரிதும் உதவுகின்றன. 

சிங்கம், புலி, யானை, சிறுத்தை, காண்டாமிருகம் என வனவிலங்குகளின் வீடியோக்கள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் இருக்கின்றன. இதில் பல வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அதேதான் வளரப்பு மிருகங்களான... நாய், பூனை ஆகியவற்றை தாண்டி ஆமை, முயல், குதிரை உள்ளிட்டவற்றின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்படும் ஒன்றாக உள்ளது. இவை மீம் மெட்டீரியலாகவும் உள்ளது.

மேலும் படிக்க | மூன்று பாம்புகளை விழுங்கி கக்கும் ராஜநாகம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News