‘கன்பியூஸ் ஆய்டேன்’: எஸ்கலேட்டரில் குழம்பி நின்ற பூனையின் வேடிக்கையான வைரல் வீடியோ

Funny Cat Video: பூனை ஒன்று எஸ்கலேட்டரில் ஏறும் இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 08:39 PM IST
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
  • இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.
  • பூனையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
‘கன்பியூஸ் ஆய்டேன்’: எஸ்கலேட்டரில் குழம்பி நின்ற பூனையின் வேடிக்கையான வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பூனைகளின் பல வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. சில வீடியோக்களில் பூனை நடனமாடுவதையும், சில வீடியோக்களில் பூனை ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் காணலாம். சில வீடியோக்களில் பூனைகள் குழந்தைகளை அழகாக பார்த்துக்கொள்வதையும் பார்த்துள்ளோம். சில வீடியோக்களில் பூனைகள் செய்யும் கேட்வாக் பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது. தற்போதும் ஒரு பூனையின் மிக வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. இதை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள ஒரு  வீடியோவில் பூனை ஒன்று எஸ்கலேட்டரில் ஏறுவதைக் காண முடிகின்றது. பூனை நீண்ட நேரம் எஸ்கலேட்டரில் ஏற முயற்சிப்பதை இதில் நாம் காண்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் பூனை கீழ் நோக்கி வந்துவிடுகிறது. ஏனெனில், அது கீழ் நோக்கி செல்லும் எஸ்கலேட்டரில் ஏற முயற்சிக்கிறது. வீடியோவின் முடிவில், ஒரு நபர் பூனைக்கு உதவுவதையும், மேலே செல்லும் எஸ்கலேட்டரின் மறுபுறத்தில் பூனையை வைப்பதையும் காண்கிறோம். இந்த வீடியோவை பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ

பூனையின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

வேடிக்கையான வீடியோ

இந்த வீடியோவை காண்பவர்களால் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த வீடியோ "Yoda4ever" என்ற பக்கத்தில் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் இது போன்ற வேடிக்கையான வீடியோக்கள் அடிக்கடி பகிரப்படுகின்றன. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பில், "நல்ல வேளை, பூனைக்கு அந்த நபர் உதவினார்’ என எழுதப்பட்டுள்ளது. 

வைரலான பூனை வீடியோ

பூனை ஒன்று எஸ்கலேட்டரில் ஏறும் இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். 

இந்த வேடிக்கையான வீடியோவில் மக்கள் பல ஈமோஜிகளையும் அளித்து வருகிறார்கள். பலர் பூனைக்கு உதவிய மனிதனைப் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News