நடுரோட்டில் கட்டிப்பிடித்து காதல் செய்த ராட்சத பல்லிகள்: காதலா ஊடலா என குழம்பும் நெட்டிசன்கள்

Wild Animal Video: இது காதலா சண்டையா என இணையவாசிகளை குழம்ப வைத்துள்ளது இந்த வீடியோ. ராட்சத பல்லிகளின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2022, 05:41 PM IST
  • நடு ரோட்டில் கட்டிக்கொண்ட கொமோடோ டிராகன்.
  • காதலா ஊடலா என குழம்பும் நெட்டிசன்கள்.
  • வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
நடுரோட்டில் கட்டிப்பிடித்து காதல் செய்த ராட்சத பல்லிகள்: காதலா ஊடலா என குழம்பும் நெட்டிசன்கள்  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு தினமும் சமூக ஊடகங்களில் அதிகம் வெளியிடப்படுகின்றன. அருகில் சென்று பார்க்க முடியாத இந்த விலங்குகளை வீடியோக்கள் மூலமாக காண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சிங்கம், யானை, முதலை என பல வித விலங்குகளின் வீடியோக்கள் வெளியாகின்றன. 

பல சமயங்களில் நாம் எதிர்பாராத நேரங்களில் சில வினோத விலங்குகளை நாம் காண்கிறோம். இவற்றை கண்டு நாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறோம். சில விலங்குகளை பார்த்தால் நமக்கு குலை நடுங்கும். அவற்றில் ஒரு வகை விலங்குகள்தான் ராட்சத பல்லிகளான கொமோடோ டிராகன்கள். இவை பல்லியை போல தோற்றமளிக்கும், ஆனால், அளவில் மிக பெரியதாக இருக்கும். 

மேலும் படிக்க | கார் மேல் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு ; வீடியோ வைரல் 

தற்போது இரண்டு கொமோடோ டிராகன்கள், அதாவது வைல்ட் மானிட்டர் லிசார்டின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இரண்டும் பார்த்தவுடன் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போல காணப்படுகின்றது. எனினும் இந்த வீடியோவை பார்த்தால் இரண்டும் ஆசையோடு தழுவிக்கொண்டு அன்பை பரிமாறிக்கொள்வது போலவும் தெரிகிறது. இரண்டு விலங்குகளும் சாலையின் நடுவில் ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு நிற்பதை வீடியோவில் காண்கிறோம். இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றது. வாகனங்கள் செல்ல முடியாமல் அப்படியே நிற்கின்றன. 

நடு ரோட்டில் கட்டிக்கொண்ட கொமோடோ டிராகன் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு ராட்சத பல்லிகள் அதாவது கொமோடோ டிராகன் சாலையின் நடுவில் கட்டிக்கொண்டு நிற்பதை காண முடிகின்றது. இரண்டு ராட்சத பல்லிகளுக்கும் நடுவில் இருப்பது சண்டையா அல்லது காதலா என்பது தெளிவாகவில்லை. இதன் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரு பல்லிகளையும் பார்த்தால் அன்பை பரிமாறிக்கொள்வது போல, காதலிப்பது போலதான் தெரிகிறது, ஆனால், உண்மையில் இவை சண்டை போடுவதாக கூறப்படுகின்றது. வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

காதலா சண்டையா என தெரியாத ராட்சத பல்லிகளின் செயலை இந்த வீடியோவில் காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NowThis (@nowthisnews)

இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது

இந்த வீடியோவில் நாம் காணும் காட்சியை பொதுவாக, அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. கொமோடோ டிராகன் என்பது இந்தோனேசிய தீவுகளான கொமோடோ, ரிங்கா, புளோரஸ், கீலி மோட்டாங் மற்றும் கீலி தசமி ஆகிய பகுதிகளில் காணப்படும் அரிய வகை மாபெரும் பல்லி இனம் என்று கூறப்படுகிறது. ஒரு கொமோடோ டிராகனின் எடை சராசரியாக 80 முதல் 90 கிலோ இருக்கும். இந்த வீடியோ nowthisnews இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. நெட்டிசன்களும் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இணையவாசிகளுக்கு இந்த அரிய ராட்சத பல்லிகளை காண ஆர்வமாக இருப்பதுடன் இந்த விலங்குகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.  

மேலும் படிக்க | கண்ணால் பேசிய மணப்பெண், மாப்பிள்ளை கொடுத்த கியூட் பதில்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News