Dancing Grannies: பாட்டிகள் நடனமாடினால் மக்களுக்கு பிரச்சனையா? இதென்ன கூத்து?

பாட்டிகள் நடனமாடுவது தங்கள் சமூக நீதிக்கு தீங்கு விளைவிக்கிறது என்று இளைஞர்கள் சொன்னால் ஆச்சரியமாக இருக்காதா? இது பொறாமையா? இல்லை இசைத் தொல்லையா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2021, 03:18 PM IST
  • பாட்டிகள் நடனமாடுவது சமூக அநீதி
  • மூதாட்டிகளின் நடனம் தொல்லை என புலம்பும் இளைஞர்கள்
  • செஞ்சிலுவை தசாப்த மக்கள் யார்?
Dancing Grannies: பாட்டிகள் நடனமாடினால் மக்களுக்கு பிரச்சனையா? இதென்ன கூத்து? title=

புதுடெல்லி: பெண்மணிகளும் மூதாட்டிகளும் நடனமாடினால் பார்ப்பவர்களுக்கு பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்று சொன்னால், அதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், அது மக்களுக்கு பிரச்சனையாக மாறியிருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இரவு நேரங்களிலும், அதிகாலையில் பொது பூங்காக்கள் மற்றும் நடன மையங்களில் கூடும் பெண்கள் நடனமாடுகின்றனர்.  

இது சீனாவில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனை... நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் நடனமாடுவது உள்ளூர்வாசிகளுக்கு எரிச்சலூட்டும் செயலாக மாறியிருக்கிறதாம்! உடற்பயிற்சி செய்வதற்கும், மற்றவர்களுடன் பேசிப் பழகவும் ஒரு வாய்ப்பாக நடனத்தை பெண்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.
 
1960 களின் கலாச்சாரப் புரட்சியை (Cultural Revolution) சந்தித்த இந்த ‘குழுகள்’ ஒன்றாக இணைந்து ‘அதிரடியான இசைக்கு’ நடனமாடுகின்றன. இந்த 'நடனமாடும் பாட்டிகளை' பார்த்து உள்ளூர் மக்கள் 'மிகவும் பயப்படுகிறார்கள்' என்று தி கார்டியன் வெளியிட்ட செய்தி கூறுகிறது. இதனால், 50 மீட்டர் தொலைவில் இருந்து ஸ்பீக்கரை முடக்குவதாகக் ஒருவர் கூறுவது, மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வாகிவிட்டதாம்! இந்த விஷயம் தற்போது சீனாவின் வைரஸ் செய்தியாக மாறிவிட்டது!

ALSO READ | இந்தியாவில் மிக நீளமான தலைமுடி கொண்ட பெண்

சீனாவின் ஈபேயின் பதிப்பான Taobao-வில் (Taobao, China’s version of eBay)" ஒரு பயனர் இது குறித்து என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? ‘தரைத்தளம் இறுதியில் அமைதியாகிவிட்ட்து. இரண்டு நாட்களாக பாட்டிகளின் இசைத் தொல்லை இல்லை. தங்கள் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என்று பாட்டிகள் நினைத்துவிட்டார்கள்!’ 

மற்றொருவர், "சிறந்த கண்டுபிடிப்பு, இந்தக் கருவியின் மூலம் நான், எனது விருப்பத்திற்கு நானே முதலாளியாக இருப்பேன்" என்று கருத்து தெரிவித்தார். இது வழக்கமான கிடைக்காத "சமூக நீதி!" என்று நக்கலடிக்கிறார்.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) பத்திரிகைச் செய்தியின் படி, நடனம் இந்த வயதான பெண்களை பிறருடன் இணைக்கிறது. குறிப்பாக தனியாக வாழும் பெண்கள், சமூகத்துடன் தொடர்பு கொள்ள இந்த வழி சுலபமானதாக இருக்கிறது. இந்த பெண்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றனர். பெரும்பாலும் ஷாப்பிங் அல்லது குழு முதலீடுகள் என வழக்கமான வேலைகளை ஒன்றாக சேர்ந்து செய்கிறார்கள்.

READ ALSO |  'ஊர்வசி ஊர்வசி' நடனத்தை அனுபவித்து ஆடும் ஏர்ஹோஸ்டஸ் வீடியோ வைரல்

இருப்பினும், உரத்த இசை காரணமாக ஒலி மாசுபாடு ஏற்படுவதாக, உள்ளூர் சீன குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். "அவர்களில் பெரும்பாலோர் செஞ்சிலுவை சகாப்தத்தின் தயாரிப்புகள், அவர்கள் சமுதாயத்தையோ சுற்றுச்சூழலையோ மதிக்கவில்லை" என்று குய்யாங்கில் வசிக்கும் ஒரு இளைஞர் கருத்து தெரிவிக்கிறார்.

"வரலாற்று ரீதியாக எஞ்சியிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று Square dancing. பல முதியவர்கள் முழு சீனாவும் தங்கள் தலைமுறையால் கட்டமைக்கப்பட்டதாக உணர்கிறார்கள். அவர்களுக்கு முழுமையான குரல் மற்றும் அந்தஸ்து உள்ளது.

நாங்கள் இளைஞர்கள் எதுவும் செய்யவில்லை என்றும், நிச்சயமாக அவர்களை கேள்வி கேட்க எங்களுக்கு தகுதி இல்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்" என்று இளைஞர் கூறும் கருத்து இந்த இளம் தலைமுறையின் எண்ணப்போக்குக்கு சான்றாக இருக்கிறது...

ALSO READ | Vitamin B12 குறைபாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்; எச்சரிக்கை தேவை..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News