இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிக வருமானம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு போட்டாலும் அதற்கு அவருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா? அதுவும் கோடிக்கணக்கில்!!!
சமூக ஊடகங்களின் தாக்கத்தையும், அதில் செய்யும் விளம்பரங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துக் கொள்ள இந்த ஒரு விஷயம் போதுமானது. விராட் கோலி மட்டுமல்ல, பல பிரபலங்களும் விளையாட்டைத் தவிர இப்படி பல்வேறு விதங்களிலும் வருமானம் பார்க்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிப்பவர் சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் போடும் ஒவ்வொரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கும் அவருக்கு 11.9 கோடி ரூபாய் கிடைக்கிறது!
#sportsnews #InstagramRichList @Cristiano tops coveted list, @imVkohli only #Indian in top-20; check full @instagram rich list for 2021#Instagram #Ronaldo #ViratKohli #Kohli #Messi #Neymar #CristianoRonaldo #INDvENG #India #Cricket
LIST - https://t.co/KnhN4q7mG8 pic.twitter.com/vAplluB1Ia
— CricketCountry (@cricket_country) July 2, 2021
HopperHQ’s 2021 ‘Instagram Richlist’இல் முதல் -20 இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர், விராட் கோலி மட்டுமே. அவர் 19 வது இடத்தில் இருந்தாலும், ஒரு பதிவுக்கு 5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
கிட்டத்தட்ட 132 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்திய கேப்டன் இன்ஸ்டாகிராமில் பூமா முதல் GOOGLE DUO, WROGN என பல பிராண்டுகளை ஊக்குவிக்கிறார். விராட்டின் ஒரு இன்ஸ்ட்ராகிராம் பதிவின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்!!!
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டுவைன் ‘தி ராக்’ ஜான்சன், ஒரு இன்ஸ்ட்ராகிராம் பதிவுக்கு 11 கோடி ரூபாய் பெறுகிறார். மூன்றாவது இடத்தை பாப் பாடகி அரியானா கிராண்டே பெற்றுள்ளார்.
கைலி ஜென்னர், செலினா கோம்ஸ் மற்றும் கிம் கர்தாஷியன் ஆகியோர் ‘இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில்’ நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளனர். ஏழாவது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, இந்த பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு விளையாட்டு வீரர் ஆவார். நெய்மர் 16 வது இடத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மெஸ்ஸியின் ஒரு பதிவின் மதிப்பு 8.6 கோடி ரூபாய் என்றால் நெய்மர் ஒரு பதிவுக்கு 6.1 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.
Also Read | முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில்
ஆச்சரியம் என்னவென்றால், 395 செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் இல்லை, ஆனால் மூன்று தென்னாப்பிரிக்க வீரர்களான ஆப் டிவில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் பட்டியலில் இடம் பிடித்தனர்.
கோஹ்லி தவிர, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 27 வது இடத்தை பிடித்துள்ளார். புகைப்பட-வீடியோ பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமில் அவர் போடும் ஒவ்வொரு விளம்பர பதிவுக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு 3 கோடி ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் என அனைத்து சமூக ஊடக தளங்களிலும் சேர்த்து 500 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ரொனால்டோவை பின்தொடர்கின்றனர். இந்த சாதனையை இதுவரை யாருமே செய்ததில்லை என்பது சுவராசியமான விஷயம். கிளியர் ஹேர்கேர், நைக் கால்பந்து, சிக்ஸ் பேட் யூரோப்) (Clear Haircare, Nike Football, Six Pad Europe என பல பிராண்டுகளை இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ விளம்பரப்படுத்துகிறார்.
ஸ்போர்டிகோவில், சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான ஹூக்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரொனால்டோவின் பதிவுகளால் 2020 ஆம் ஆண்டில் 75 மில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் ஆனது. 2021 ஆம் ஆண்டில் அது 100 மில்லியன் டாலராக உயரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
Also Read | இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை, தனி வீரரானர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR