துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது டிக்டாக்கில் இணைந்ததன் பின்னணி என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் (Dubai) ஆட்சியாளரும் ஆன சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) அதிகாரப்பூர்வ டிக்டோக் (TikTok) கணக்கைத் தொடங்கினார், தனது முதல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2020, 02:42 PM IST
  • துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது டிக்டாக்கில் இணைந்தார்
  • டிவிட்டரில் மிகவும் பிரபலமானவர் ஷேக் முகமது
  • அரபு நாடுகளில் சமூக ஊடக செயலிகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது டிக்டாக்கில் இணைந்ததன் பின்னணி என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் (Dubai) ஆட்சியாளரும் ஆன சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) அதிகாரப்பூர்வ டிக்டோக் (TikTok) கணக்கைத் தொடங்கினார், தனது முதல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக தளங்களில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஷேக் முகமதுவும் ஒருவர். அவர் அதிகாரப்பூர்வமாக வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான டிக்டாக்-கில் (TikTok) இணைந்துள்ளார் என்பது நவீன காலத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்த்துவதாக சமூக மற்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சமூக ஊடக தளங்களில் (Social Media) அதிகம் பின்தொடர்பவர்களை கொண்டவர்களில் ஒருவரான ஷேக் முகமது, தனது சொந்தக் குரலில் பேசி, உத்வேகம் தரும் வீடியோவை வெளியிட்டு டிக்டோக்கில் தடம் பதித்துள்ளார். இந்த டிக்டாக் வீடியோவை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர்; 20,000 பேர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்; 2,500 க்கும் மேற்பட்ட பேர் பகிர்ந்துள்ளனர். 

துபாயை (Dubai) ஆட்சி செய்யும் ஷேக் முகமது, பொது சேவையில் தனது 50 ஆண்டுகால பயணத்தின் சிறு கிளிப்களையும் பகிர்ந்துகொள்வார், இது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு, ஆட்சியின் தலைமை மற்றும் நிர்வாகத்தில் நுண்ணறிவுகளை வழங்குவதாக்வும் இருக்கும்.

Also Read | Hi-Tech ஆனது அரச குடும்பம்: Alexa மூலம் வரும் இங்கிலாந்து ராணியின் Christmas wish

ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் அதிகாரப்பூர்வ டிக்டாக் (TikTok) கணக்கைத் தொடங்குவது என்பது, அவரைப் பின்தொடரும் மக்களுக்கு, குறிப்பாக டிக்டோக்கின் பார்வையாளர்களில் பெரும்பான்மையாக இருக்கும்  இளம் தலைமுறையினருடன் இணைவதற்கான ஆர்வமாக பார்க்கப்படுகிறது. காலத்திற்கேற்ப மாறவேண்டும் என்ற விவேகமான செயலாகவும் கருதப்படுகிறது. 

ஷேக் முகமது ஏற்கனவே டிவிட்டரில் (Twitter) பிரபலமானவர். தற்போது டிவிட்டரில் டிக்டோக்கில் இணைவது பற்றிய செய்தியை வெளியிட்ட அவர், “டிக்டோக்கில் 800 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். மக்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்புகிறோம். நேர்மறையான உள்ளடக்கத்தை உருவாக்க விரும்புகிறோம். இளைஞர்களின் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறோம், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க இது ஒரு நல்ல வழி" என்று தெரிவித்துள்ளார்.

Also Read | Pfizer தடுப்பூசி போடும் பெண்களுக்கு தாடி வளர்வது உண்மையா?

நம்பிக்கையை பரப்ப புதிய தளம் டிக்டாக்
ஷேக் முகமது பின் ரஷீத், இளைஞர்களை தங்கள் சமூகங்களில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கும், சமூகங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் புதுமையான தீர்வுகளை உருவாக்க ஊக்கமளிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முக்கிய இலக்கு இளைஞர்கள் தான். இளைஞர்களே, எதிர்வரும் காலத்தின் ஆணிவேர்கள் என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டும் ஷேக் முகமது பின் ரஷீத், இளைஞர்களை ஆக்கப்பூர்வகான பாதையில் கொண்டு செலுத்தும் முயற்சிகளில் ஒரு  பகுதியாக அவரது சமூக ஊடக பயன்பாடுகள் இருக்கின்றன. 

ஷேக் முகமது பின் ரஷீத் சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரப்படும் உலகத் தலைவர்களில் ஒருவர். அவரை சமூக ஊடக தளங்களில் 22.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். 

கலீஜ் டைம்ஸ் ஊடகத்தின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் ட்விட்டர் தளத்தில் (Twitter) முதலிடம் பிடித்துள்ளார் ஷேக் முகமது பின் ரஷீத். அவர் தனது சமூக ஊடக கணக்குகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மக்களுக்கு, நாட்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார். அதோடு, ஊக்கமளிக்கும் பதிவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.  

Also Read |  நேபாளத்தில் அரசியல் நெருக்கடி.. நாடாளுமன்றத்தை கலக்க பரிந்துரை..!!!

பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, லெபனான் (Lebanon) மக்களுக்காக பிரார்த்தனை செய்து, தனது இரங்கலையும் பகிர்ந்து கொண்டார். அந்த டிவிட்டர் செய்தியே 2020ஆம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட ட்வீட்டர் பதிவு என்ற சாதனையை பதிவு செய்துள்ளது.