Pfizer தடுப்பூசி போடும் பெண்களுக்கு தாடி வளர்வது உண்மையா?

சர்வதேசங்களையும் புரட்டிப் போட்ட கொரோனா, கோவிட் என ஆடிப் போயிருந்த உலகம், தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தயாரித்துள்ள கோவிட் -19 தடுப்பூசியால் (COVID-19 vaccine) சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறும் கூற்று ஆடச் செய்கிறது.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 20, 2020, 12:36 AM IST
  • கொரோனா தடுப்பூசி போட்டால் பெண்களுக்கு தாடி வளருமா?
  • கோவிட்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களின் குரல் ஆண் குரலாக மாறுமா?
  • பிரேசில் அதிபர் ஏன் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பது ஏன்?
Pfizer தடுப்பூசி போடும் பெண்களுக்கு தாடி வளர்வது உண்மையா?

புதுடெல்லி: சர்வதேசங்களையும் புரட்டிப் போட்ட கொரோனா, கோவிட் என ஆடிப் போயிருந்த உலகம், தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தயாரித்துள்ள கோவிட் -19 தடுப்பூசியால் (COVID-19 vaccine) சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறும் கூற்று ஆடச் செய்கிறது.  

COVID-19 ஐ "ஒரு சிறிய காய்ச்சல்" என்று அடிக்கடி குறிப்பிடும் போல்சனாரோ, தடுப்பூசிகளை நம்பக்கூடாது என்று கூறுகிறார், மேலும் கொரோனாவுக்கு தான் தடுப்பூசி (Vaccine) போட மாட்டேன் என்று தெரிவித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

COVID-19 தடுப்பூசி குறித்து தனது கவலைகளை தெரிவித்த அவர், தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் பொறுப்பேற்க நிறுவனம் மறுத்துவிட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறார். "ஃபைசர் ஒப்பந்தத்தில் இது மிகவும் தெளிவாக உள்ளது: 'எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.' நீங்கள் ஒரு முதலையாக (crocodile) மாறினால், அது உங்கள் பிரச்சினை" என்று மருந்து உற்பத்தி நிறுவனம் கூறுவதை (Jair Bolsonaro) குறிப்பிடுகிறார்.

Also Read | எங்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என ஜனாதிபதி திட்டவட்டம்..!

"நீங்கள் சூப்பர் மனிதராக மாறினாலோ, ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினாலோ  அல்லது ஆண் குரலில் பேச ஆரம்பித்தாலோ, அதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது" என்று அவர் தொடர்ந்து கூறுவது மக்களின் அச்சத்தை அதிகரிக்கிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் தடுப்பூசியை பெருமளவு மக்களுக்கு போடுவதைத் தொடங்கியுள்ள நேரத்தில் பிரேசில் அதிபரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. உள்ளூர் அறிக்கையின்படி, பிரேசிலின் ஒழுங்குமுறை நிறுவனமான அன்விசா-வும் (Anvisa) விரைவில் தடுப்பூசிக்கு சான்றிதழ் வழங்கவுள்ளது.

இந்த தடுப்பூசி கட்டாயமாக போடப்பட வேண்டும் என்று பிரேசில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தான் உத்தரவிட்டது. எது எவ்வாறாயினும், இந்த தடுப்பூசியை பிரேசில் மக்கள் மீது "கட்டாயப்படுத்த" முடியாது என்று அதிபர் கூறுகிறார். அதாவது மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த முடியாது . ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சில சிக்கல்கள் எழலாம். சில இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படலாம்.

Also Read | இது கோழியா இல்லை டைனோசரா? இல்லை மயிலா?

கடந்த வாரம் புதன்கிழமை நோய்த்தடுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்த வைத்த போல்சனாரோ, வெகுஜன தடுப்பூசி இயக்கம் நாட்டில் இலவசம் என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி (vaccine) மீது உலகமே நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், சில பல சந்தேகங்கள் இருப்பதால், பிரேசில் (Brazil) அதிபர் போல்சனாரோ தடுப்பூசியிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார். "இது விரும்பும் அனைவருக்கும் இது கிடைக்கும், ஆனால் நான், தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று அவர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, பிரேசிலில் இதுவரை கிட்டத்தட்ட 185,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட 7.1 மில்லியன் பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் லாக்டெளன் (Lockdown) அமலில் இல்லை என்றாலும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசங்கள் (Mask) அணிவது அவசியம் என்ற கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.  

Also Read | ஆரோக்கியமான இளைஞர்களுக்கு 2022 வரை கோவிட் தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்: WHO

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News