’நடிகன்டா.. நீ நடிகன்டா’ நடிப்பில் மிரளவைக்கும் நாய்; வைரல் வீடியோ

நாய் ஒன்று சாலையில் விழுந்து நடிக்கும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2022, 07:45 PM IST
’நடிகன்டா.. நீ நடிகன்டா’ நடிப்பில் மிரளவைக்கும் நாய்; வைரல் வீடியோ title=

மனிதர்களுக்கு நடிக்க சொல்லித் தர தேவையில்லை. அவர்களுக்கு இருக்கும் அறிவை பயன்படுத்தி நடிப்பில் அசத்திவிடுவார்கள். திரையில் நடித்தால் மட்டும் தான் நடிப்பு என்றில்லை. ஜாலியாக வீட்டில் இருக்கும்போதுகூட உறவினர்களை மகிழ்விப்பதற்காக நடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருசிலர் திரையில் நடிப்பவர்களையே விஞ்சிவிடுவார்கள். அந்தளவுக்கான திறமையெல்லாம் ஒரு சில நேரங்களில், சந்தர்ப்பங்களில் பார்க்க நேரிடும். ஆனால், விலங்குகள் நடித்து பார்த்திருக்கிறீர்களா?. பூனை, நாய் என வீட்டு விலங்காக இருந்தாலும் சரி, சிங்கம் புலி என காட்டுவிலங்காக இருந்தாலும் சரி. அவற்றை நடித்து, ஜாலியாக விளையாடுவதை பார்ப்பது மிக மிக அரிது. 

மேலும் படிக்க | இதுதான் உண்மையான 'கேட் வாக்'... மாடல்களுக்கே சவால் விடும் பூனை!

அவையனைத்தும் விளையாடும் என்றாலும், நடித்து கலாய்த்துக் விளையாடுவதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எங்கோ ஒரு பகுதியில் நாய் ஒன்று அப்பட்டமாக நடிக்கும் வீடியோ இணயத்தில் வைரலாகியுள்ளது. சாலையின் ஒரு ஓரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இரு நாய்கள், ஒரு வாகனம் கடந்து சென்றதும், வாகனம் மோதி ஏதோ விபத்தை ஏற்படுத்திவிட்டதுபோன்ற கீழே விழுந்து புரள்கிறது. அதற்கேற்ப சத்தத்தையும் எழுப்புகிறது. பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஒரே ஷாக். ஏனென்றால், அந்த வண்டி சென்றதற்கும், நாய் கீழே விழுந்து புரள்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

வண்டி சென்றபிறகு தான் சில நொடிகள் கழித்து நாய் கீழே விழுவதுபோல் ஆக்டிங் செய்துகிறது. கொஞ்ச நேரம் கதறியழுகிறது. சத்தம் விடுகிறது. யாரும் கண்டு கொள்ளவில்லை எனத் தெரிந்தவுடன் இயல்பாக எழுந்து நின்று கொள்கிறது. இதனை ஒருவர் அழகாக வீடியோவாக பதிவு செய்துள்ளார். டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது வரை ஏராளமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும், கமெண்டில், நீ நடிகன்டா.. நல்ல நடிகன்டா என பதிவிட்டுள்ளனர். நடிகர்களையே விஞ்சும் அளவுக்கு பர்மாமென்ஸில் அசத்துகிறது அந்த நாய்க்குட்டி. 

மேலும் படிக்க | 'போன் வேணும்...' அடம் பிடிக்கும் குட்டி, அடக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News