சும்மா இருந்த பசுவை சீண்டிப்பார்த்த நபர்: வெச்சி செஞ்ச பசு, ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ

Cow Revenge Viral Video: அமைதியாக இருக்கும் பசுவை ஒருவர் சீண்டிப்பார்க்க, அதற்கு பசு கொடுத்த பதிலடியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2022, 12:55 PM IST
  • பசுவை வம்புக்கு இழுத்த நபர்.
  • பழிக்கு பழி வாங்கிய பசு.
  • வைரலாகும் வீடியோ.
சும்மா இருந்த பசுவை சீண்டிப்பார்த்த நபர்: வெச்சி செஞ்ச பசு, ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காரணமே இல்லாமல் மற்றவர்களை துன்புறுத்தினால், பதிலடி கிடைப்பது நிச்சயம். மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், அனைவரும் அவரவர் எல்லைக்குள் இருப்பது மிக அவசியம். இது மீறப்பட்டால், அதற்கான விளைவையும் சந்திகக் வேண்டி வரும். இதை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அப்பாவி விலங்குகளை சிலர் தேவை இல்லாமல் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது வெளிவந்துள்ள வீடியோ அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாடமாகவே அமைகிறது. 

வைரலாகிவரும் இந்த வீடியோவில், பசு ஒன்று அமைதியாக நிற்பதையும் அதை ஒருவர் உதைக்கத் தொடங்குவதையும் காண்கிறோம். உதைப்பது மட்டுமல்லாமல், அவர் அதன் வாலை முன்னால் பிடித்து இழுக்கத் தொடங்குகிறார். ஆனால் அடுத்த நொடியில் பசு மாடு இப்படி செய்யும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். 

மேலும் படிக்க | துரத்திய புலியை விரட்டிய பசு: நம்ப முடியாத வைரல் வீடியோ

பதிலடி கொடுத்த பசு 

இந்த வீடியோ ஒரு குடியிருப்பு பகுதியில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. இதில் ஒருவர் மௌனமாக நிற்கும் பசுவை அடிப்பதை நாம் முதலில் காண்கிறோம். முதலில், அவர் அதை உதைக்கிறார். சிறிது நேரம் கழித்து பசுவின் வாலைப் பிடித்து முறுக்கத் தொடங்குகிறார். பசுவிற்கு அவரது இந்த செயல் கடும் சினத்தை ஏற்படுத்துகின்றது. அடுத்த நொடியே அது பதிலடி கொடுக்க தயாராகிறது. திரும்பி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தும் மாடு, அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவரை துரத்தி துரத்தி கோவத்தை தீர்த்துக்கொள்கிறது. மாடு அந்த நபரை மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு தாக்கி விடுகிறது. 

சீண்டிய நபரை வெச்சி செஞ்ச பசுவின் வீடியோவை இங்கே காணலாம்: 

காரணமே இல்லாமல் வாயில்லா பிராணிகளை தாக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ ஒரு பாடமாக அமைகிறது. விலங்குகள் திரும்பித்தாக்கத் துவங்கினால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. இந்த வீடியோ @gharkekalesh என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | சிங்கங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த முதலை, அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News