யானையின் வேற லெவல் டேலண்ட்: உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது!!

Viral Video: இந்த பதிவில் நாம் காணவுள்ள வீடியோவும் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 06:54 PM IST
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • யானை ஒன்று ஓவியம் வரைவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
யானையின் வேற லெவல் டேலண்ட்: உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது!! title=

Viral Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பல நேரங்களில் விலங்குகள் தங்கள் திறமைகளால் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த பதிவில் நாம் காணவுள்ள வீடியோவும் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. யானை ஒன்று ஓவியம் வரைவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

நல்ல ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் வெகு சிலரே. ஓவியம் என்பது ஒரு கலை. அது அனைவருக்கும் அவ்வளவு எளிதாக வந்துவடுவதில்லை. இந்நிலையில், மிக அருமையாக ஓவியம் தீட்டும் யானையின் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள், ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் தங்கள் கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

ALSO READ | பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட முரட்டு யானை- Video Viral

ஓவியம் தீட்டிய யானை

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), யானை ஒன்று தனது தும்பிக்கையில் ஸ்கெட்ச் பேனாவை வைத்திருப்பதையும், அதன் எதிரே வெள்ளை பலகை ஒன்று இருப்பதையும் காண முடிகின்றது. யானை அந்த பலகையில் அனாயாசமாக படம் வரையத் தொடங்குகிறது. அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் யானை தீட்டும் ஓவியம் மிகவும் சிறப்பாகவும், கச்சிதமாகவும் இருக்கிறது.

அப்படி என்னதான் வரைகிறது யானை என கேட்கிறீர்களா? தன்னைத்தான் வரைகிறது யானை!! யானை முதலில் தும்பிக்கையையும் பின்னர் கால்களையும் வரைகிறது. இறுதியில், அழகாக வாலையும் வரைந்து விடுகிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, யானை தன்னையே அழகாக வரைந்து விடுகிறது. 

யானை அற்புதமாக தன்னையே வரையும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

யானையின் வீடியோ வைரலானது

யானை (Elephant) ஓவியம் வரைந்த இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் அங்குசமயா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனுடன், இது ஆயிரக்கணக்கான ரீட்வீட்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை வியந்து பாராட்டும் ட்விட்டர் பயனர்கள் பல்வேறு கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

ALSO READ | ’இது எங்க ஏரியா..!’ சிங்கத்தின் ஒற்றை பார்வையில் ஓடிய ஓநாய்கள் - Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News