தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயலும் யானைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க கலெக்டர் எடுத்த நடவடிக்கையால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 04:28 PM IST
  • விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சாலைகள் அல்லது ரயில் பாதைகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுகிறது.
  • ஆனால் அந்த தடுப்பு சுவர்கள் யானை செல்ல ஏதுவாக இல்லாமல் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.
தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!  title=

மனிதர்களை போல விலங்குகளும் உயிரினங்கள் தான், மனிதர்களுக்கு எவ்வாறு வாழிடங்கள் முக்கியமானதோ அதேபோல தான் விலங்குகளுக்கும் வாழிடங்கள் என்பது முக்கியமான ஒன்றாகும்.  அவற்றின் வாழிடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படும்போது தான், அவை மனிதர்களின் வாழிடத்திற்குள் நுழைந்து எதிர்வினனையாற்றுகின்றன.  தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோவால் வனவிலங்குகளின் வாழிடத்தேவை குறித்த விவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  குறிப்பிட்ட அந்த வீடியோ பரவ தொடங்கியதும் வனவிலங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் (Railway Ministry)நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ALSO READ | ’இது எங்க ஏரியா..!’ சிங்கத்தின் ஒற்றை பார்வையில் ஓடிய ஓநாய்கள் - Viral Video

 

விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சாலைகள் அல்லது ரயில் பாதைகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுகிறது.  ஆனால் அந்த தடுப்பு சுவர்கள் யானை (Elephant) போன்ற பெரிய விலங்குகள் செல்ல ஏதுவாக இல்லாமல் அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.  IAS அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் , நீலகிரியின் ரயில் பாதைகளை யானை கூட்டங்கள் கடக்க சிரமப்படுகிறது.  ஏனெனில் இடையில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அவற்றால் நேரடியாக காட்டிற்குள் செல்ல முடியாமல் ரயில் பாதையில் நீண்ட நேரம் நடந்து சென்ற பிறகே காட்டிற்குள் செல்ல முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால் நல்ல வேலையாக அந்த யானைகள் றையில் பாதையை கடக்கும்பொழுது ரயில்கள் எதுவும் வரவில்லை.  

 

இந்த வீடியோவை பகிர்ந்தவர் அதனுடன் " இதனை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது, ஆபத்துகள் நிறைந்த இந்த ரயில் பாதையில் யானை கூட்டங்கள் செல்லுகின்றன.  உடனடியாக இதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்ற கேப்ஷனையும் பதிவிட்டு இருந்தார்.  இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் அந்த தடுப்பு சுவர்களை இடித்து யானைகளுக்கு சரியான வழித்தடங்களை அமைத்துக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.  ரயில்வே நிர்வாகத்தின் இந்த உடனடி நடவடிக்கையை பாராட்டி   IAS அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த IAS அதிகாரியையும், ரயில்வே நிர்வாகத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

 

ALSO READ | பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட முரட்டு யானை- Video Viral

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News