பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட முரட்டு யானை- Video Viral

கோவை அருகே அரசுப் பேருந்தை தாக்க வந்த காட்டு யானை ஒன்று பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வனப் பகுதிக்குள் திரும்பிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 03:00 PM IST
பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட முரட்டு யானை- Video Viral title=

கோவை அருகே அரசுப் பேருந்தை தாக்க வந்த காட்டு யானை ஒன்று பழங்குடியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வனப் பகுதிக்குள் திரும்பிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை (Coimbatore) மாவட்டம் ஆனைகட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இதனை சுற்றி ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு மாங்கரை வனப்பகுதி வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 

இந்நிலையில் நேற்று மாலை கோவையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. 

மாங்கரை வனப்பகுதி வழியாக மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தூமனூர் பிரிவு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, ஆவேசமாக ஓடி வந்து பேருந்தை தாக்க முயன்றது. 

அப்போது பேருந்தில் இருந்த பழங்குடியின மக்கள் சிலர், யானையை (Elephant Video) பார்த்து போ போ போ சாமி என சத்தமிட, யானை அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதனை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News